பக்கம் எண் :

48அயோத்தியா காண்டம்

     ‘மகன்வயின் அன்பினால் மயங்கி - (தயரதன் அரசர்களை நோக்கி)
என்மகன்மீது கொண்ட பாசத்தினால் அறிவு மயங்கி;  யான் இது புகல -
நான் இந்தக் கருத்தைத் தெரிவிக்க; நீர் புகன்ற இ பொம்மல் வாசகம் -
(அதற்கு இணங்கி) நீங்கள் சொன்ன இந்தப்பொலிவு பெற்ற வார்த்தை;
உகவையின் மொழிந்ததோ - மன மகிழ்ச்சியினால் புகன்றதோ?;தகவு
என நினைந்தது -
தகுதி என்று கருதியது; எத் தன்மையால் என்றான் -
எவ்வகையினால்’ என்று வினவினான்.

     உகவை - மகழ்ச்சி; உகவையான் நெஞ்சம் உள்ளுருகி என்பது 
நம்மாழ்வார் வாக்கு (திருவாய்மொழி6.2.9).                        78

1392.இவ்வகை உரைசெய இருந்த வேந்து அவை.
‘செவ்வியோய்! நின் திருமகற்குத் தேயத்தோர்
அவ்வவர்க்கு, அவ்வவர் ஆற்ற ஆற்றும்
எவ்வம்இல் அன்பினை, இனிது கேள்’ எனா,

     இவ் வகை உரை செய - (தயரதன் ) இவ்வாறு வினவ;  இருந்த
வேந்து  அவை -
அங்கே இருந்த அரசர் கூட்டம்; செவ்வியோய் -
(தயரதனை நோக்கி) செப்பமுடையோய்!; நின் திருமகற்கு - உன் மகன்மீது;
தேயத்தோர் அவ்வவர்க்கு - அங்கங்கே பற்பலநாட்டில் உள்ளோரும்;
அவ்வவர் ஆற்ற ஆற்றுறும் - அவரவர்களும்  மிகவும்  செய்கின்ற;
எவ்வம் இல் அன்பினை - குறைவில்லாத அன்பினை;  இனிது கேள்
எனா
- இன்பமாகக்கேட்பாய்’  என்று சொல்லி.

     இது முதல் நான்கு பாக்களும் ஒரு தொடர். திருமகற்கு - உருபு
மயக்கம்;  ‘கு’ ஏழனுருபில் வந்தது.                             79

1393. ‘தானமும், தருமமும், தகவும், தன்மை சேர்
ஞானமும், நல்லவர்ப் பேணும் நன்மையும் -
மானவ! - வையம், நின் மகற்கு; வைகலும்,
ஈனம் இல் செல்வம் வந்து இயைக என்னவே.

     ‘மானவ - மனுவின் குலத்தில் தோன்றியவனே!;  நின் மகற்கு - உன்
மகனிடத்தில்;ஈனம் இல் செல்வம் -தாழ்வில்லாத அரசச் செல்வம்; வந்து
இயைக என்ன
- வந்துபொருந்தக் கடவது என்று சொல்வது  போல; 
தானமும் - கொடைத் தன்மையும்;  தருமம் -அறநெறியும்;  தகவும் -
ஒழுக்கமும்; தன்மை சேர் ஞானமும் - மேன்மை பொருந்திய
மெய்யுணர்வும்;  நல்லவர்ப் பேணும் நன்மையும் - பெரியோரைப்
போற்றிக் காக்கும் நற்பண்பும்; நின்மகற்கு வைகலும் வைகும் - உன்
மகனுக்கு என்றும் நிலையாகத் தங்கியுள்ளன.’

     இதனால் இராமனுக்கு அரசனாதற்குரிய அனைத்துத் தகுதிகளும் 
உள்ளன என்றனர் அரசர்கள் . தானம்- அறநெறியால் வந்த பொருளைத்
தக்கார்க்கு.