பக்கம் எண் :

480அயோத்தியா காண்டம்

2113.துளைமுகத்தின் சுருதி விளம்பின;
உளை முகத்தின உம்பரின் ஏகிட,
விளை முகத்தன வேலையின் மீது செல்
வளை முகத்தன வாசியும் வந்தவே.

     சுருதி- வேத ஒலி; துளை முகத்தின்- உள் துளையுடைய குழலின்
மூலமாக; விளம்பின- ஒலிக்கப்பெற்றன; உளை முகத்தின- தலையாட்டம்
பொருந்தியனவும்; உம்பரின் ஏகிட-ஆகாயத்தில் செல்வதற்கு;
விளைமுகத்தன- வல்ல செலவினையுடையவும்; வேலையின் மீது செல்-
கடலின் மீது, செல்லும் ஆற்றல் உடையனவும் (ஆகிய); வளை முகத்தன-
வளைந்த முகத்தினைஉடைய; வாசியும்- குதிரைகளும்; வந்த-
இப்படைக்குழுவில் வந்தன.

     “குழுவு நுண் தொளை வேய்” என்றார் முன்னும். (2073.) குதிரைப்
படை வருணனையில் குழலிசைபற்றிய குறிப்பு ஏன் - விளங்கவில்லை.   12

2114. வில்லின் வேதியர், வாள் செறி வித்தகர்,
மல்லின் வல்லர், கரிகையின் வல்லவர்,
கொல்லும் வேல் குந்தம் கற்று உயர் கொற்றவர்,
தொல்லை வாரணப் பாகரும், சுற்றினார்.

     வில்லின் வேதியர்- வில் வித்தைக்குரிய  நூலில்
தேர்ச்சியடைந்தவர்களும்; வாள்செறி வித்தகர்- வாட்போர் புரிவதில்
திறமை உடையவரும்; மல்லின் வல்லார்- மல்சண்டையில் வலிமை
படைத்தவரும்; கரிகையின் வல்லவர்- குற்றுடைவாளை வீசுதலில்
வல்லவர்களும்; கொல்லும்- (பிறரை) அழிக்கின்ற;  வேல் குந்தம் சுற்று
உயர் கொற்றவர்
-வேல் ஈட்டி ஆகிய படைகளை வீசக் கற்று உயர்ந்த
வெற்றியாளர்களும்; தொல்லை- பழமையான(அனுபவம் மிக்க); வாரணப்
பாகரும்
- யானை ஓட்டுநரும்; சுற்றினார்- சூழ்ந்து வந்தார்கள்.

     வேதம் வல்லவர் வேதியர். இங்கு வில் வேதம்; தனுர் வேதம் என்று
வடிமொழியிற்குறிப்பிடுவர்.  கொல்லும் வேல் உபசார வழக்கு.         13

2115.எறிபகட்டினம், ஆடுகள், ஏற்றை மா,
குறி கொள் கோழி, சிவல், குறும்பூழ், நெடும்
பொறி மயிர்க் கவுதாரிகள், போற்றுறு
நெறியின் மாக்களும் முந்தி நெருங்கினார்.

     எறி- ஒன்றை ஒன்று எறிகின்ற; பகட்டினம்- எருதுகளின் கூட்டம்;
ஆடுகள்-;  ஏற்றை மா- ஆண் விலங்குகள்; குறிகொள் கோழி-
(தம்மை ஏவுவாரது) குறிப்பினைக் கொண்டு பொருதல்