செய்யும் கோழிகள்; சிவல் -; குறும்பூழ் -; பொறி நெடுமயிர்க் கவுதாரிகள்-(உடலிற்) புள்ளியுடைய நீண்ட மயிர் உடையதாகிய கவுதாரிப் பறவையும் (என இவற்றைப்); போற்றுறு- பாதுகாத்து வைத்துப் போரிடச் செய்யும்; நெறியின் - துறையில் சிறந்த; மாக்களும்- மக்களும் ; முந்தி நெருங்கினர் -. 47,48 இப்பாடல்களை இங்கு ஒப்பு நோக்குக. பறவையும், விலங்கும் ஆகியவற்றைப்போரிடவிட்டுக் காண்டல் அக்கால அரசர்க்குரிய பொழுது போக்குகளுள் ஒன்றாதலின் அத்துறைவல்லவர் உடன் சென்றனர். ‘நெறி இல் மாக்கள்’ விலங்கையும் பறவையையும் தம்முன்மோதவிடுவார் நன்னெறியில்லாத அறிவற்றவர் ஆதலின் மாக்கள் எனப்பெற்றார் என்பதும் பொருள். ஈண்டு மக்களை ‘மாக்கள்’ என்று கூறியது செய்யுள் ஓசை நிறைத்தற் பொருட்டு, 14 2116. | நிறைந்த மாந்தர் நெருங்கினர் நெஞ்சினில், ‘பறந்து போதும்கொல்’ என்று, பதைக்கின்றார், பிறந்த, தேவர், உணர்ந்து, பெயர்ந்து முன் உறைந்த வான் உறுவார்களை ஒக்கின்றார். |
நெருங்கினர் நிறைந்த மாந்தர்- ஒருவரோடு ஒருவர் நெருங்கிய அறிவால் நிறைந்த மக்கள்; நெஞ்சினில்- தம் மனத்தில்; ‘பறந்து போதும் கொல்’ என்று- பறந்து சென்று விடுவோமா (அயோத்திக்கு) என்று கருதி; பதைக்கின்றார்- துடிக்கின்றார்;(இவர்கள்) தேவர்- தேவர்கள்; பிறந்து- சாபத்தால் மண்ணிற் பிறந்து; உணர்ந்து - பாச நீக்கத்தால் (அறிவுணர்ந்து) தாம் தேவர் என அறிந்து; பெயர்ந்து - இம்மண்ணுலகை விட்டு நீங்கி; முன் உறைந்த வான் - தாம் முன்பு வாழ்ந்த தேவருலகை; உறுவார்களை - அடைய விரைகின்றவர்களை; ஒக்கின்றார் - ஒப்பவராய் உள்ளார்கள். சாப நீக்கம் தேவர்கள் தம் வான் உலகு செல்லத் துடித்தலும் விரைதலும் பரதன் உடன் செல்வார் அயோத்திக்கு விரைந்து செல்லத் துடித்தலுக்கு உவமை. இவர்களின் பதைப்பையும் விரைவையும் ‘பறந்து போதும்’ என்பது விளக்கும். ‘கொல்’ ஐயம். 15 2117. | ஊன் அளைந்த உடற்கு உயிர் ஆம் எனத் தான் அளைந்த தழுவின, தண்ணுமை, தேன் அளைந்து செவி உற வார்த்தென, வான் அளைந்தது, மாகதர் பாடலே. |
மாகதர்- மாகதர்களின் பாடல்; தேன் அளைந்து - தேனோடு கலந்து; செவி உற வார்த்னெ- செவியிற் பொருந்தும்படி (செவித் கினிமையாக) சொரிந்தாற் போன்றனவாகி; வான் அளைந்தது- |