பக்கம் எண் :

பள்ளிபடைப் படலம் 483

எந்திரத்து ஊறுபாகு- கரும்பாலைகளில்  ஊறுகின்ற வெல்லப்பாகு; மடை
உடைத்து
- (வயல்களில் நீர்பாய்ச்சஉள்ள வாய்க்கால் வழிச் சென்று)
மடைகளை உடைத்துக்கொண்டு;  ஒள் முளை நாறு வயல் பாய்- சிறந்த
முளையுடைய நாற்றுகள் பொருந்திய வயலிலே பாய்வதற்கு இடனாக உள்ள;
கோசலம் - கோசல நாட்டை;  நண்ணினான் -  சேர்ந்தான்.

     அயோத்தியிலிருந்து  சென்ற பரதன் கேகய நாட்டை ஏழு நாளில்
நண்ணினான் என்று முன்னர்ச் சொன்னதை (1311.) ஈண்டு நினைவு கூர்க.
கான் கடந்து,  மலைஏறி,  ஆறு நீந்தி எனற் கேற்ப, ‘ஆறும் கானும்
மலையும்’ எனவும், ‘கடந்து,  ஏறி,  நீந்தி’எனவும் அழைத்த அழகு அறிந்து
இன்புறத்தக்கது.                                                18

கோசல நாட்டின் அழகிழந்த காட்சி  

2120.ஏர் துறந்த வயல்; இள மைந்தர் தோள்
தார் துறந்தன; தண் தலை நெல்லினும்,
நீர் துறந்தன; தாமரை நீத்தெனப்
பார் துறந்தனள், பங்கயச் செல்வியே.

     வயல் - வயல்கள்; ஏர் துறந்த - கலப்பையைத் துறந்திருந்தன; இள
மைந்தர் தோள்
- இளைய ஆடவர்களின் தோள்;  தார் துறந்தன -
(இன்பச்சிறப்பிற்குக் காரணமான) பூமாலைகளை நீங்கியிருந்தன; நீர்-; தண்
தலை
-குளிர்ந்த இடமாகிய வயல்; நெல்லினும் - நெற்பயிரின்கண்ணும்;
துறந்தன -இல்லாமல் இருந்தன; தாமரை நீத்தென - (நீர் இல்லாமையால்)
தாமரை (அந்நாட்டில்)இல்லாமல் சென்றுவிட்டதாக; பங்கயச் செல்வி -
தாமரையில் வீற்றிருக்கின்ற திருமகள்; பார் துறந்தனள் - (தான் வாழ்கின்ற
மனையாகிய தாமரை இல்லாமையால்) கோசலநாட்டை விட்டு நீங்கினாள்.

     வயலை உழுவார் இன்மையால் ஏர் துறந்தன.  ஏர் - அழகு என்றும்
கொள்ளலாம். சோகம்நாட்டைக் கவ்வுதலின் ஆடவர் தார் அணியவில்லை.
நெற்பயிரும், தாமரையும் இன்றி  வயல்கள்பொலிவழிந்தன. மன்னன்
இறப்பவும், இராமன் காடு செல்லவும் நாடு பொலிவிழந்ததாம். “எவ்வழி
நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே”  (புறநா. 187) என்றது
ஒப்புநோக்கத்தக்கது.                                          19

2121.பிதிர்ந்து சாறு பெருந் துறை மண்டிடச்
சிதர்ந்து சிந்தி அழிந்தன தேம் கனி;
முதிர்ந்து, கொய்யுநர் இன்மையின், மூக்கு அவிழ்ந்து
உதிர்ந்து உலர்ந்தன, ஓண் மலர் ஈட்டமே.

     தேம் கனி - இனிய பழங்கள்;  (கொய்யுநர் இன்மையின்) சாறு
பிதிர்ந்து
- பறித்துண்பார் இல்லாமையால் சாறு வெளிப்பட்டு;