பக்கம் எண் :

பள்ளிபடைப் படலம் 513

     ‘மூத்தவற்கு உரித்து அரசு’ என்பது சூரிய குல மரபு. மூத்தவன்
இருக்க, இளையவனாய பரதன்அரசுபுரிய வரம் வாங்கிய காரணத்தால்
அம்மரபைச் சிதைத்தாள் கைகேயி என்றான் பரதன்.  “மயின்முறைக் குலத்
துரிமையை மனுமுதல் மரபைச் செயிர்  உற” (1470) என்பதனைம இங்குக்
கருதுக. நின்னால் மரபு மாய்ந்தது என்றானாம். ‘ஓ’வினாப்பொருட்டு.    74

2176.‘கவ்வு அரவு இது என இருந்திர்; கற்பு எனும்
அவ் வரம்பு அழித்து, உமை அகத்துளே வைத்த
வெவ் அரம் பொருத வேல் அரசை வேர் அறுத்து,
இவ் வரம் கொண்ட நீர் இனி என் கோடிரோ?

    ‘கற்பு எனும் அவ் வரம்பு அழித்து- கற்பு என்று சொல்லப்படுகின்ற
பெண்களுக்குரிய அறநெறிய்ன் வரம்பை அழித்து’ உமை அகத்துஉளே
வைத்த - உம்மை (காதலியாகத்) தன் நெஞ்சத்துள்ளே நிலை
நிறுத்திக்கொண்ட; வெவ்அரம் பொருத வேல் அரசை
- கொடிய
அரத்தால் அராவப் பெற்ற வேற்படையை உடைய அரசனை; வேர்
அறுத்து
- அடியோடு கெடுத்து; இவ்வரம் கொண்ட நீர் - இந்த
வரங்களைப்பெற்றுக்கொண்ட  நீர்;  கவ்வு அரவு இது என இருத்திர் -
அகப்பட்டவரைக் கவ்விஅடியோடு அழிக்கும் பாம்பு இது எனச்
சொல்லும்படியாக இருந்துகொண்டுள்ளீர்!;  இனி என்கோடிரோ -
இனிமேல் எதைக் கொள்ளப் போகிறீரோ?’

     கணவன் உரைக்கு மாறுபடலின் கற்பை அழித்தாள் என்றான்.
அன்புடைய கணவன் உயிர்போதற்குக் காரணம் ஆகி, பின்னர் வரும்
பிள்ளைக்கும் பெருந் துன்பம் செய்தாள் ஆதலின்‘கல்வு அரவு’ என்றான்.
அகப்பட்டோரை எல்லாம் பற்றிக் கொல்லும் அரவு’ என்றான்  -தயரதன்,
இராமன், அயோத்திவாழ்வார், பரதன் என்று அனைவர்க்கும் தீங்கு
செய்தலின்.                                                   75

கலித்துறை

2177.நோயீர் அல்லீர்; நும் கணவன்தன் உயிர் உண்டீர்;
பேயீரே நீர்! இன்னம் இருக்கப் பெறுவீரே?
மாயீர்! மாயா வன் பழி தந்தீர்! முலை தந்தீர்!
தாயீரே நீர்! இன்னும் எனக்கு என் தருவீரே!

    ‘நும் கணவன் தன் உயிர் உண்டீர் - உம் கணவனது உயிரைக்
குடித்தீர்; (ஆயினும்) நோயீர் அல்லீர்
- நோய் போன்றவர்அல்லீர்; நீர்
பேயீரே
- நீர் பேய் போன்றவரே;  (இத்தகைய நீர்) இன்னம்இருக்கப்
பெறுவீரே
- (கணவன் இறந்த பிறகும்) இன்னமும் உயிருடன்
வாழ்வதற்குரியவர்ஆவீரே? (உரியரல்லீர்); மாயீர் - இறந்து போக மாட்டீர்;
முலை தந்தீர் -(குழந்தையாய் இருந்தபொழுது) பால் கொடுத்த வளர்த்தீர்;
தாயீரே நீர்- (ஆகையால்)நீர் என் தாயார்தான்; மாயா வன்பழி தந்தீர்-
(இளைஞனாய் இருக்கும்பொழுது) அழியாத