பக்கம் எண் :

514அயோத்தியா காண்டம்

     கொடும்பழி கொடுத்து என்னைக் கெடுத்தீர்; இன்னம் -
எதிர்காலத்தில்; எனக்கு -; என் தருவீர் - என்ன தரப்போகின்றீர்?’

     நோய் சிலநாள், இருந்து உயிர் கொல்லும், கணவன் உயிரை உடனே
கொன்றாள் ஆதலின்பேய் போன்றாள் என்றான். பழி தந்தீர்; முலை
தந்தீர்; இன்னம் என் தருவீர்! என்பதுஇகழ்ச்சி செய்து வினாயது. ‘மாயீர்’
என்பதற்குச் சாகமாட்டீர்; மற்றவர்கள் எல்லாம்சாவைத் தழுவ நீர்மட்டும்
சாகாமல் இருப்பீர் என்று அவளது கொடுமையின் மிகுதியைக்காட்டினான்.
‘ஏ’ ஈற்றசை.                                                  76

2178.‘ஒன்றும் பொய்யா மன்னனை வாயால், உயிரோடும்
தின்றும், தீரா வன் பழி கொண்டீர்; திரு எய்தி
என்றும் நீரே வாழ உவந்தீர்; அவன் ஏக,
கன்றும் தாயும் போல்வன கண்டும் கழியீரே!

     ‘ஒன்றும் பொய்யா மன்னனை - சிறிதளவும் வாய்மையில் தவறாத
தயரத மன்னனை; வாயால் - (வரமாய) வாய்ச்சொல்லால்; உயிரோடும்
தின்றும்
- உயிரோடு தின்றுவைத்தும்; தீரா வன் பழி கொண்டீர் -
உலகுள்ளவும் விட்டு நீங்காத கொடும் பழியைத்தேடிக்கொண்டீர்; அவன்
ஏக
- அந்த மன்னன் இறந்துபட; திரு எய்தி - அவனுக்குரிய அரசுச்
செல்வத்தை அடைந்து; நீரே என்றும் வாழ உவந்தீர் - நீரே என்றைக்கும்
வாழ வேண்டும்என மகிழ்ந்தீர்!; கன்றும் தாயும் போல்வன கண்டும் -
தாயும் கன்றும் போலஒன்றியிருந்து அன்பு செய்யும் பொருள்களைக் கண்டு
வைத்தும் (கன்றாகிய இராமனைப் பிரிந்துவாழத் தாயாகிய உம்மால்
எவ்வாறு இயன்றது); கழியீரே - உம் மனக்கருத்தைமாற்றிக்கொள்ளீரே!’

     ‘யார் எப்படிப் போனால் என்ன; நான் வாழ்ந்தால், போதும்’ எனக்
கைகேயி நினைத்ததைப் பரதன் சுட்டிப் பழித்தான். ‘கழியீரே’ என்பது
கழிதல் - பழையன நீங்குதல் - கழியீரே - எதிர்மறை.  நீங்க மாட்டீரே -
பழைய உம் கருத்தை மாற்றிக்கொள்ள மாட்டீரே என்றான்.  அதற்குக்
‘கன்றும் தாயும் போல்வன கண்டும்’ என்பது சான்று.உலகில் கன்றும் தாயும்
பாசத்தால் நெருங்கி வாழ்வதுபோல் இராமனிடத்தில் உங்கள்தாய்ப்பாசம்
சிறந்திருந்தால் அவன் காடு போக நேர்ந்திராது என்றானாம். இனி
இவ்வடிகளுக்குஇராமன் வனம் ஏகிய போது, நாட்டில் உள்ள மக்கள்
எல்லாம் கன்றைத் தொடரும் தாய் போலஅவன் பிரிவால் துயருற்றுப் பின்
தொடர்ந்தும் அவலித்தும் சென்ற நிகழ்ச்சியைக்கண்டுவைத்தும் உமது
கருத்தைக் கழியீரே என்று பொருள் உரைப்பதும் உண்டு. நாட்டார்
அனைவரும் இராமன்பால் அன்புடையராய் இருப்பதைக் கண்டும்
இராமனைக் காட்டிற்குச் செல்லச் செய்து  நீர்யாரை ஆளப் போகிறீர்
என்று சொன்னான் எனக் கருதலாம். இப்பொருளில் அயோத்தியில் இராமன்
காடேகிய போது நாடெல்லாம்  உடன் தொடர்ந்து  சென்ற செய்தி பரதன்
செவிப்பட்டதாகக்கொள்ள வேண்டிவரும். அங்ஙனம் கொண்டால் இதுவரை
பரதன் கைகேயியை வினாவிய வினாக்கள்பொருளற்றுப் போகும் என்னும்
குறையுண்டு. ஏற்பன அறிக. இனி இப்பாட்டில், அவன் ஏக - அந்தஇராமன்
கானகம் செல்ல என்றும் உரைக்கலாம். ‘அவன் ஏக’ என்பதனை
முன்மாற்றாது நேரே கொண்டு‘அவன் ஏக,