பக்கம் எண் :

216யுத்த காண்டம் 

எல்லோரும்     புலம்பி  அழுதார்கள்;  வானமகளிரும்  -  (அப்
புலம்பலைக் கேட்ட) தேவமகளிரும்; இரங்கிபோய் - இரக்கம் (மிக்குப்)
போய்; வாய் திறந்து மாழ்கினார் - வாயைத் திறந்து அழுதனர்; ஏனை
மகளிர்   நிலை
 -  அரக்க  மகளிரது  நிலைமை;  என்  ஆகும்  -
என்னவாகும்?
 

தலைமயங்கி  -  ஒன்றுகூடி,  ஏனை மகளிர் - அரக்க மகளிர் என்க.
மாழ்குதல் - அழுது புலம்பல்.
 

                                                 (274)
 

8001.

தார் அகலத்து அண்ணல் தனிக் கோயில் தாசரதி
பேர, உலகு உற்றது உற்றதால், பேர் இலங்கை;
ஊர் அகலம் எல்லாம், அரந்தை, உவா உற்ற
ஆர்கலியே ஒத்தது, அழுத குரல் ஓசை.
 

பேர்     இலங்கை - பெரிய இலங்கை மாநகரம்; தார் அகலத்து
அண்ணல்
 -  மாலையை மார்பில் அணிந்த தலைவனாகிய; தாசரதி -
‘தசரத ராமன்; தனிக் கோயில் - ஒப்பற்ற தன் அரண்மனையிலிருந்து;
பேர  - (காடு  நோக்கிச்) செல்ல; உலகு உற்றது உற்றதால் - உலகம்
அடைந்த   துன்பத்தை   அடைந்தது;  ஊர்  அகலம்  எல்லாம்  -
ஊர்ப்பரப்பு  முழுவதும்;  அரந்தை  -  தோன்றிய  துன்பம்  கலந்த;
அழுத குரலோசை - அழுங்குரலோசை; உவா உற்ற-முழு மதி நாளில்
தோன்றிய;   ஆர்கலியே   ஒத்தது   -   கடலின்  ஓசையை  ஒத்து
விளங்கியது.
 

இலங்கை   இராமன் காடேகிய போது உலகம் அடைந்த துன்பத்தை
அடைந்து. அங்குத் தோன்றிய அழுகுரலோசை முழு மதிநாளின் கடல்
ஓசையை   ஒத்திருந்தது.  அகலம்  -  மார்பு,  தாசரதி  -  தசரதன்
மைந்தன்,  இராமன்.  கோயில்  - அரண்மனை, அரந்தை - துன்பம்,
உவா - முழுமதி, ஆர்கலி - கடல்.
 

                                                 (275)