பக்கம் எண் :

540அயோத்தியா காண்டம்

அந்த வசிட்டனும்; அழுது புல்லினான் - பரதனைத் தழுவி அழுதான்.

     “எந்தை யாண்டையான்” தசரதனைப் பற்றிய வினாவாதல் அன்றி
இராமனைப் பற்றியவினாவாகவும் அமையும். “எந்தையும்...இராமன்” (2159)
என்று பரதன் முற்கூறினனாதலின் ‘இராமன்எவ்விடத்தான்’ என வினாவினன்
எனலும் ஆகும். அதற்கும் முனிவன் பதில் உரைக்கமாட்டுகின்றிலன்.   121

கோசலை பரதனை நோக்கி இறுதிக்கடன் செய் எனல்  

2223.‘மறு இல் மைந்தனே! வள்ளல், உந்தையார்,
இறுதி எய்தி நாள் ஏழ் - இரண்டின;
சிறுவர் செய் கடன் செய்து தீர்த்தி’ என்று,
 உறுவல் மேயினாள் உரையின் மேயினாள்.

    ‘மறு இல் மைந்தனே!- களங்கம் இல்லாத மகனே!  (பரதனே);
வள்ளல் உந்தையார்
- வண்மையுடையராகிய உன்தந்தையார்; இறுதி
எய்தி - மரணம் அடைந்து;  நாள் ஏழ் இரண்டின - பதினான்கு நாள்கள்
ஆயின; சிறுவர் செய்கடன்- பெற்றோர்களுக்குப் புதல்வர் செய்யவேண்டிய
இறுதிக்கடன்களை; செய்து தீர்த்தி’- செய்து முடிப்பாயாக;’ என்று உறுவல்
மேயினாள்உரையின் மேயினாள்
- என்று துன்பத்தில் பொருந்தியவளாய
கோசலைத தன் சொல்லால்பரதனுக்கு அனுமதி தந்தாள்

     ‘நாள் ஏழ் இறந்தன’ என்று பாடம் கூறி, ‘ஏழ் நாள்கள் ஆயின;
இன்று எட்டாவது  நாள்’எனல் உண்டு,  தூதுவர் செய்தி தாங்கிச் சென்று
பரதனிடம் சொல்ல, அவன் மீண்டும் அயோத்திஎய்த இடைப்பயணம் ஏழு,
ஏழு நாள்கள் ஆதலின் பதினான்கு எனலேநேரிதாதல் அறிக.
கோசலத்துக்கும்கேகயத்துககும் ஏழு நாள் வழிப்பயனம் என்பது முன்னர்க்
கூறினும். “ஏழு நாளிடை,  நளிர்புனல்கேகய நாடு நண்ணினான்” எனவும்,
“ஏழ் பகல் நீந்தி, “கோசலம் நண்ணினான்” எனவும் (1311,2118)
வருவனவற்றைக் காண்க.                                        122

  பரதன் வசிட்ட முனிவனோடு சென்று  
தந்தையின் திருவுருவை நோக்கல்  

2224.அன்னை ஏவினாள், அடி இறைஞ்சினான்;
பொன்னின் வார் சடைப் புனிதனோடும் போய்,
தன்னை நல்கி, அத் தருமம் நல்கினான்
பன்னு தொல் அறப் படிவம் நோக்கினான்.

     ஏவினாள்- (தந்தைக்கு நீர்க்கடன் செய்யச் செல்க) என்று ஏவிய;
அன்னை அடி இறைஞ்சினான்
-தாயின் திருவடிகளை