பக்கம் எண் :

542அயோத்தியா காண்டம்

பரிவின்- (மனத்தின்கண் நிகழும்) அன்பிரக்கத்தோடு; மன்னனை -தயரத
மன்னனது  உடலை;  அவ்வயின் - அஃதுள்ள இடத்தினின்றும்;  சுற்றும்
பற்றிவாங்கினார்
- நாற்பக்கமும் இருந்து தம் கையாற் பற்றி எடுத்து;
கொற்ற மண்கணை குமுற- வெற்றி தரும் வீரமுரசம் பேரொலி செய்ய;
மற்று ஓர் பொன்னின் மா மானம் ஏற்றினார்- வேறொரு
பொன்னாலியன்ற பெரிய விமானத்தில் எற்றினர்.

     வேதம் எழுதாக் கிளவியாதலின் கற்றார் என்னாது கேள்வியார்
என்றார். உடலை எடுத்தல், ஏற்றுதல் ஆகிய அனைத்திற்கும் மந்திரமும்,
தந்திரமும் உண்டாதலின் விமானம் ஏற்றுதலைஅந்தணர் மேற்றாக்கினார்.
                                                           125

2227.கரை செய் வேலைபோல், நகரி, கை எடுத்து,
உரை செய் பூசலிட்டு, உயிர் துளங்குற,
அரச வேலை சூழ்ந்து, அழுது, கைதொழ,
புரசை யானையில் கொண்டு போயினார்.

    நகரி- நகரத்திள் உள்ளார்; கரை செய் வேலை போல் - தனக்குரிய
கரையைத் தானே செய்துகொள்ளும் கடலைப் போல்; கையெடுத்து உரை
செய் பூசலிட்டு
- மிகவும் கூக்குரலெடுத்துஆரவாரித்து; உயிர் - தம்முயிர்
நிலைகுலையவும்; அரச வேலை - அரசர்களாகிய கடல்; சூழ்ந்து -
சுற்றிவந்து; அழுது கைதொழ- புலம்பி வணங்கவும்; புரசை யானையின்-
மணிகட்டப்பட்ட கயிற்றினைப் பிடரியின் கண் உடைய யானை மேல்;
கொண்டு போயினார்- கொண்டு சென்றார்கள்.

     விமானத்தை யானைமேற் கொண்டு சென்றார் என்க. கொண்டு
சென்றார் ‘கேள்வியர்’ எனமேற்வாட்டின்கண் உள்ள எழுவாய் வருவித்து
முடிக்க.                                                     126

சாப்பறை முதலியன ஒலித்தல்  

2228.சங்கு பேரியும், தழுவி சின்னமும்
எங்கும் எங்கும் நின்று இரங்கி ஏங்குவ,
மங்குல் தோய் நகர் மகளிர் ஆம் எனப்
பொங்கு கண் புடைத்து அழுவ போன்றவே.

    சங்கு- சங்குகளும்; பேரியும் - சாப்பறையும்; தழுவு சின்னமும் -
இறப்பின் கண்ஊதப்படுகின்ற கொம்புகளும்;  எங்கும் எங்கும் நின்று
இரங்கி ஏங்குவ
எல்லாப்பக்கங்களிலும் இருந்து கேட்பவர்க்குத்
துன்பமுண்டாம்படி அமுதாற்போல ஒலிக்கின்றவை; மங்குல்நோய் நகர் -
மேகங்கள் வந்து  படியப் பெறுகின்ற நகரம்; மகளிராம் என -(தானே)
பெண்களைப் போலிருந்து; பொங்கு கண் புடைத்து - துன்ப மிகுதியுடைய
கண்களைஅடித்துக்கொண்டு; அழுவ போன் அழுகின்றவை போன்றன.