பக்கம் எண் :

பள்ளிபடைப் படலம் 543

     பறை முதலியன ஒலித்தல் நகரமே கண்புடைத்து அழுதல் போலும்,
கண் புடைத்து அழுதல்‘மகளிர்போல’ என்று கூறினார். பேரி - பெருமுரசு.
இங்குச் சாப்பறை ஆம்.                                       127

தயரதன் உடலம் சரயு நதி அடைதல்  

2229. மாவும், யானையும், வயங்கு தேர்களும்,
கோவும், நான் மறைக் குழுவும், முன் செல,
தேவிமாரொடும் கொண்டு, தெண் திரை
தாவு வார் புனல் சரயு எய்தினார்.

     மாவும் - குதிரைகளும்;  யானையும் - யானைகளும்;  வயங்கு -
விளங்குகின்ற;  தேர்களும் -;  கோவும் - அரசர்களும்;  நான்மறைக்
குழுவும் -நான்மறையாளர் கூட்டமும்; முன்செல - முன்னே செல்ல;
கொண்டு - (தயரதனதுபிரேதத்தைக்) கொண்டுசென்று; தேவிமாரொடும் -
(தயரதன்) மனைவிமாருடனே;  தெண்திரைதாவு - தெள்ளிய அலைகள்
தாவுகின்ற;  வார் புனல் - மிக்க தண்ணீரை உடைய;  சரயுஎய்தினார் -
சரயு நதியை அடைந்தார்கள்.

     தேவிமார் அறுபதினாயிரவர். “தேவிமாரை இவற்குரிமை செய்யும்
நாளில் செந்தழலில், ஆவிநீத்திர் என இருத்தி” (1915.) என்பது காண்க. 128

தயரதனை ஈமப்பள்ளி ஏற்றி, பரதனை இறுதிக்கடன் செய்ய அழைத்தல்  

2230.எய்தி, நூலுளோர் மொழிந்த யாவையும்
செய்து, தீக் கலம் திருத்தி, செல்வனை,
வெய்தின் ஏற்றினார்; ‘வீர! நுந்தைபால்
பொய் இல் மாக் கடன் கழித்தி போந்து’ என்றார்.

     (நான்மறைக் கேள்வியார்) எய்தி - (சரயு நதியை) அடைந்து;  நூல்
உளோர்மொழிந்த யாவையும் செய்து- (ஸ்மிருதி) நூல்களை உடையோர்
சொல்லிய விதிகள் எல்லாம்செய்து முடித்து; தீக்கலம் திருத்தி -
தீச்சட்டியை ஒழுங்குபடுத்தி; செல்வனை -தயரதனை; வெய்தின் -
விரைவாக;  ஏற்றினார் - (ஈமப்பள்ளியில்) ஏற்றிவைத்து;(பரதனை நோக்கி)
‘வீர! - வீரனே!; நுந்தைபால் - உன்தந்தையிடத்து; பொய்இல் மாக்கடன்-
(நீ செய்ய வேண்டிய ) வேதவழி பிறழாத பெருங்கடமையை; போந்து
கழித்தி
- வந்து  செய்வாயாக;’ என்றார் -.

     பிறப்பு, இறப்புச் சடங்குகள் பற்றிக் கூறுவன ‘ஸ்மிருதி நூல்கள்’
எனப்படுதலின், அவற்றைஅறிந்தவரையே இங்கு ‘நூலுளோர்’ என்றார்
என்க.                                                       129