பக்கம் எண் :

பள்ளிபடைப் படலம் 545

பரதன் துயரதத்தால் அழுதல்  

2233.இடிக்கண் வாள் அரா இடைவது ஆம் எனா,
படிக்கண் வீழ்ந்து அகம் பதைக்கும் நெஞ்சினான்,
தடுக்கல் ஆகலாத் துயரம் தன்னுளே
துடிக்க, விம்மி நின்று அழுது சொல்லுவான்;

     (பரதன்) வாள் அரா - கொடி பாம்பானது; இடிக்கண் - இடி
இடிக்கின்றகாலத்திடத்து; இடைவது ஆம் எனா - அஞ்சி நடுங்கிப்
பின்னடைவு அடைதல் போல என்றுசொல்லும்படி; படிக்கண் வீழ்ந்து -
மண்ணிடத்து  விழுந்து; அகம் துடிக்கும்நெஞ்சினான் - உள்ளே
துடிக்கின்ற மனம் உடையனாய்; தடுக்கல் ஆகலாத் துயரம் -பிறரால்
நிறுத்த வொண்ணாத துன்பம்; தன்னுளே துடிக்க - தன்னுள்ளேயே
தன்னைப்பதைபதைக்கச் செய்ய; விம்மி நின்று அழுது சொல்லுவான் -.

     இடியொலி கேட்டவழி பாம்பு அஞ்சி உயிர்விடும். அதுபோலப்
பரதனும் வசிட்டன்சொற்கேட்ட துணையான் அஞ்சி நடுங்கி மூர்ச்சித்தான்
என்க.  பரதன் துயரதம் பிறரால்ஆற்றுதற்கரியது.                   132

பரதன் புலம்பிக் கூறுதல்  

2234.‘உரை செய் மன்னர் மற்று என்னில் யாவரே?
இரவிதன் குலத்து, எந்தை முந்தையோர்
பிரத பூசனைக்கு உரிய பேறு இலேன்;
அரசு செய்யவோ ஆவது ஆயினேன்!

    ‘ ‘இரவி தன் குலத்து- சூரிய வம்சத்தில்; எந்தை முந்தையோர்-
என் தந்தை, மற்றும் முன்னோர்களது; பிரத பூசனைக்கு - பிரேத வழிபாடு
செய்வதற்கு; உரிய-; பேறு இலேன் - பாக்கியம்பெறாதவனாக உள்ளேன்;
(ஆனால்) அரசு செய்யவோ - (அந்தத் தந்தை முன்னோர்களது)
அரசினைப் பெற்று நடத்தவோ; ஆவது ஆயினேன் -
பொருந்துவதானேன்; உரைசெய் மன்னர் - புகழ்பெற்ற அரசர்கள்;
என்னில்
- என்னைக்காட்டிலும்;  மற்று யாவர் - வேறுயார் உளர்?’

     தனக்குத் தானே நொந்து கூறிக்கொண்டு, தன்னை இகழ்ந்து
புலம்புகிறான். ‘இரவி தன்குலத்துஎந்தை, முந்தையோர்களில்,  உரைசெய்
மன்னர் என்னில் மற்று யாவர்’ எனவும் கூட்டிப் பொருள்உரைக்கலாம்.
பிரேத பூசனை செய்யுங்கால், தந்தையொடு முன்னோர்களையும் இணைத்தே
செய்யவேண்டுதலின் ‘எந்தை முந்தையோர் பிரேத பூசனை’ என்று
கூட்டுவதில் தவறில்லை. ‘முன்னோர்க்குக்கடன்செய்யும் தகுதியற்ற யான்
அவர்களது உரிமையைப் பெறுவது’