தாமரை மலர் நீரிடை ஆகவும் ‘கானிடை’ என்றது இடம் நோக்கியன்று; தாமரைப் பூவின்நெருக்கமும் மிகுதியும் நோக்கிக் கூறப்பெற்றது. இங்ஙனம் கூறுவது “தாமரைக் காடு அனைய மேனித்தனிச் சுடரே” (திருவா. திருச். 26) என்ற இடத்திலும் காண்க. புதல்வர்ப் பெறாத அறுபதினாயிரம் தேவிமார் இவ்வாறு நெருப்பில் மூழ்கி நற்கதி பெற்றனர் என்க. ‘முழையில்மஞ்ஞை’ வாழும் இடம் கட்டியது. 137 | 2239. | அங்கி நீரினும் குளிர, அம்புயத் திங்கள் வாள் முகம் திரு விளங்குற, சங்கை தீர்ந்து, தம் கணவர் பின் செலும் நங்கைமார்புகும் உலகம் நண்ணினார். |
அம்புயத் திங்கள் வாள்முகம் திரு விவளங்குற- தாமரையும், சந்திரனும் போலும் ஒளிபடைத்த திருமுகம் மேலும் திருமகளின் மலர்ச்சி பொருந்தியதாக; அங்கி நீரினும் குளிர - (தம் கணவன் மேனியைத் தழுவியதாகியபாவனையால் தாம் தழுவிய) நெருப்பு நீரைக்காட்டிலும் குளிர்ந்து தோன்ற; சங்கை தீர்ந்து- மனத்துயர் நீங்கி; தம் கணவர் பின் செலும் நங்கைமார் புகும் உலகம் - தம்கணவருடன் இறந்து பின் செல்லும் கற்புடை மகளிர் எய்தும் நல்லுலகத்தை; நண்ணினார்-இவர்களும் அடைந்தார்கள். அங்கி குளிர்தல் கற்புடை இவர்களுக்கே; அன்றி நெருப்பின் சுடுதல் தன்மைமாறியதன்று. 138 ஈமக்கடன் முடித்த பரதன் மனை சேர்தல் | 2240. | அனைய மா தவன், அரசர் கோமகற்கு இனைய தன்மையால் இயைவ செய்த பின், மனையின் எய்தினான் - மரபின் வாழ்வினை வினையின் எய்தும் ஓர் பிணியின் வேலையான். |
அனைய மா தவன்- அப்பபடிப்பட்ட பெரிய தவத்திற் சிறந்தவனாகிய வசிட்டன்; அரசர் கோமகற்கு -சக்கரவர்த்தியாகிய தயரதனுக்கு; இனைய தன்மையால் - (நான்மறை வழியில்சத்துருக்கனன் மூலமாக) இப்படி; இயைவ செய்தபின் - செய்ய வேண்டிய ஈமச் சடங்குகளைச்செய்து முடித்த பிறகு; மரபின் வாழ்வினை - அரசகுலத்துக் குரிய அரசச் செல்வத்தை; வினையின் எய்தும் - (தாய் செய்த ) தீய செயலால் பெற்ற (தனால் உண்டாகிய); ஓர்பிணியின் வேலையான் - ஒரு நோய்க் கடலில் கிடக்கின்ற பரதன்; மனையின் எய்தினான்- அரண்மனைக்கண் வந்து சேர்ந்தான். வசிட்டன் செய்து முடித்தபிறகு, பரதன் அரண்மனை அடைந்தான் என முடிக்க. மரபு -பரம்பரை; இங்கே அரச பரம்பரை - அதற்குரிய வாழ்வு அரசுச் |