பக்கம் எண் :

556அயோத்தியா காண்டம்

வைகும் நாட்டினும்- பெருவலி படைத்த அசுரர்கள் தங்கியுள்ள
நாடுகளிலும்; ஏ எவை உலகம் என்று இசைக்கும்அன்னவை
- எவை
எவைகள் உலகம் என்று பெயர்பெறுமோ அவைகள் எல்லாம்; காவல் செய்
தலைவரை இன்மை
- தம்மைக் காக்கின்ற அரசர்கள் இல்லாமல்
இருத்தலை; கண்டிலம்- (யாம்) பார்த்திலோம்.’

     நல்லோராயினும், அல்லோராயினும் நாட்டிற்கு ஆள்வோர்
இன்றியமையாதவர் என்பது இதனாற்கூறியதாம். உலகம் என்றாலே அரசன்
வேண்டும் என்றார்.                                              8

2252.‘முறை தெரிந்து ஒரு வகை முடிய நோக்குறின்,
மறையவன் வகுத்தன, மண்ணில், வானிடை,
நிறை பெருந் தன்மையின் நிற்ப, செல்வன,
இறைவரை இல்லன யாவும் காண்கிலம்,

     ‘முறை தெரிந்து - முறைமையை நன்கு ஆராய்ந்து; ஒருவகை முடிய
நோக்குறின்
-ஒருபடித்தாக இறுதிவரை பார்த்தால்; மறையவன் வகுத்தன -
பிரமனால் படைக்கப்பட்டனவாகிய;மண்ணில் வானிடை - நிலத்திலும்,
விண்ணிலும்; நிறை பெருந்தன்மையின் - நிறைந்துவிளங்கும்
பேரியல்போடு; நிற்ப -நிலைத்து நிற்பன; செல்வன - இயங்குவன (வாகிய
பொருள்களில்); இறைவரை இல்லன - தலைவரைப் பெற்றிராத
பொருள்கள்; யாவும் எவையும்; காண்கிலம் - காண்கின்றிலோம். (யாம்)’

     உலகிற்கு - மன்னர் இன்றியமையாமை மேல் கூறியது. இங்குச் சரம்,
அசுரம் ஆகிய இயங்கும்,இயங்காப் பொருள்களுக்கும் தலைவர்
இன்றியமையாமை உணர்த்தப்பெற்றது. ‘நிற்ப’ என்பன மலை,மரம்
முதலியன. ‘செல்வ’ என்பன மக்கள், விலங்கு, பறவை முதலிய உயிர்களாம்.
அவற்றிடையேகூடஒரு தலைமை என்பது உண்டு என்பது அறியப்படும்.   9

2253.‘பூத்த, நாள்மலர் அயன் முதல புண்ணியர்
ஏத்து, வான் புகழினர், இன்றுகாறும் கூக்
காத்தனர்; பின், ஒரு களைகண் இன்மையால்,
நீத்த நீர் உடை கல நீரது ஆகுமால்.

     ‘பூத்த - (திருமாலின் திருஉத்தியில்) உண்டான; நாள்மலர் -
அன்றலர்ந்தாற் போன்ற தாமரை மலரில் தோன்றிய; அயன் முதல
புண்ணியர்
- பிரமதேவன்முதலிய மேலோர்களால்; ஏத்து - பாராட்டப்
பெறுகின்ற; வான் புகழினர் -சிறந்த புகழைப் பெற்ற (உன்) முன்னோர்கள்;
இன்றுகாறும் - இன்று வரையிலும்; கூ -(இந்தப் ) பூமியை;  காத்தனர் -
(அரசு நடத்திக்) காத்தார்கள்; பின் -இப்போது; ஒரு களைகண்
இன்மையால்
- (நீ அரசன் ஆகாதபடியால்)