தமக்கொரு துன்பம் நீக்கிப் பாதுகாப்பாரை இல்லாமையால்; (இவ்வுலகம்) நீத்த நீர் - கடலின்கண்; உடைகல நீரது - உடைந்த கப்பல் தத்தளிப்பது போன்றது; ஆகும் -.’ ‘நீத்த’ம் என்பது வெள்ளம் ஆதலின், நீர் நீத்தம் எனவே ‘கடல்’ என்று பொருள்ஆயிற்று. கடலின்கண் உடைந்த கப்பல் தவிப்பதைப்போல அரசன் இல்லாத நாடு அலமரும் என்றதாம்.‘ஆல்’ அசை. 10 2254. | ‘உந்தையோ இறந்தனன்; உம்முன் நீத்தனன்; வந்ததும், அன்னைதன் வரத்தில்; மைந்த! நீ அந்தம் இல் பேர் அரசு அளித்தி; அன்னது சிந்தனை எமக்கு’ எனத் தெரிந்து கூறினான். |
‘மைந்த! - பரதனே!; உந்தையோ இறந்தனன் - உன் தந்தையாகிய தயரதனோஇறந்துபட்டான்; உம் முன் - உன் தமயனாகிய இராமனோ (தந்தை சொற்கேட்டு); நீத்தனன் - (அரசைக்) கைவிட்டுக் கானகம் புகுந்தான்; வந்ததும் - (இந்த அரசுஉனக்குக்) கிடைத்திருப்பதும்; அன்னை தன் வரத்தில் - உன் தாயாகிய கைகேயியின்வரத்தால் ஆகும்; நீ அந்தம் இல் பேரரசு அளித்தி - நீ அழிவற்றதாகிய இந்தக்கோசலத் தரசை ஏற்று நடத்துக; அன்னது - (அவ்வாறு) நீ அரசு ஏற்பது; எமக்குச் சிந்தனை - எங்களுக்கு எண்ணம்;’ என - என்று; தெரிந்து கூறினான் - ஆராய்ந்து சொன்னான். மரபு வழித் தொன்றுதொட்டு வந்த அரசு என்பான், ‘அந்தம் இல் பேரரசு’ என்றான் எனினும்அமையும். 11 வசிட்டன் சொற் கேட்ட பரதன் அவல நிலை அடைதல் 2255. | ‘தஞ்சம் இவ் உலகம், நீ தாங்குவாய்’ எனச் செஞ்சேவே முனிவரன் செப்பக் கேட்டலும், ‘நஞ்சினை நுகர்’ என, நடுங்குவாரினும் அஞ்சினன் அயர்ந்தனன் - அருவிக் கண்ணினான். |
‘இவ் உலகம் - இந்த உலகம்; தஞ்சம் - (உனக்கு) அடைக்கலம்; நீ தாங்குவாய் - நீ (அரசனாக இருந்து) பாதுகாப்பாய்; என - என்று; முனிவரன் -முனிவர்களில் மேலான வசிட்டன்; செஞ்செவே - செம்மையாக; செப்பக் கேட்டலும்- சொல்லக் கேட்டவளவில்; அருவிக் கண்ணினான் - அருவிபோலக் கண்ணின் நீர் ஒழுகும்பரதன்; ‘நஞ்சினை நுகர்’ என - விடத்தை உண்பாயாக என்று ஒருவர் சொல்ல; (அதுகேட்டு) நடுங்குவாரினும் - நடுங்குகின்றவர்களைவிட; அஞ்சினன் அயர்ந்தனன்த- பயந்து சோர்ந்தான். |