பக்கம் எண் :

56அயோத்தியா காண்டம்

மனத்தைத் துறத்தி  நீ எனும் சொற்சுடும் ” (1358.)  என்ற சுமந்திரன்
வார்த்தையை  இங்குஒப்பு நோக்குக. ‘ஆல்’ ஈற்றசை.                 5

கோசலை சுமித்திரையுடன் கோயிலுக்குப் போதல்  

1404.அன்னளாயும், அரும் பெறல் ஆரமும்,
நல் நதிக் குவையும், நனி நல்கி, தன்
துன்னு காதல் சுமித்திரையோடும் போய்,
மின்னும் நேமியன் மேவு இடம் மேவினான்.

     (கோசலை) அன்னளாயும் - அத்தன்மையளாயும்,  (செய்தி சொன்ன
மங்கையர்களுக்கு); அரும்பெறல் ஆரமும் - பெறுதற்கரிய முத்து வடமும்;
நல்நிதிக் குவையும் - உயர்ந்தசெல்வக் குவியல்களையும்;  நனி நல்கி -
மிகுதியாகக் கொடுத்து; தன் - தன்னிடத்தில்;துன்னு காதல் - நெருங்கிய
அன்பினை உடைய;  சுமித்திரையோடும் போய் - சுமித்திரையுடனே
சென்று; மின்னும் நேமியன் - ஒளிவிடும் சக்கரப் படையை உடையவனாகிய
திருமால்; மேவு இடம் - வீற்றிருந்தருளும் திருக்கோயிலை; மேவினாள் -
அடைந்தாள்.

     ‘தன் நாயகன் துறப்பான்’ என்று தோன்றுகிற அச்சம் அவள்
அநுபவிப்பதே யன்றி மற்றவர்களுக்குவெளிக்காட்ட ஒண்ணாது ஆதலின்,
மகிழ்ச்சியை வெளிக்காட்டி  ஆரமும் நிதியும் சிலதியர்க்குநல்கினாள்.
கோசலையும் சுமித்திரையும் நெருங்கியவர்கள் என்பதைத் ‘துன்னு காதல்’
என்றஅடைகளால் அறியலாம். புதல்வன் நன்மையை விரும்பித் திருமாலை
வழிபடச் சென்றாள்.  சூரிய குலமன்னன் ‘இட்சுவாகு’ காலம் தொடங்கித்
திருமால் இக் குலமன்னர் குல தெய்வமாக விளங்கினர்ஆதலின் அவரை
வழிபடல் வேண்டிச் சுமித்திரையுடனே சென்றாள்.  இப்பொழுதே கைகேயி
இவ்விருவரின்வேறுபட்டுத் தனித்தன்மையுடன் இருத்தல் அறிதற்பாலது.
சுமித்திரை - நல்ல பண்பு நலன்களை உடையவள்என்ற பொருள் உடைய
பெயர்.                                                       6

1405.மேவி, மென் மலராள், நிலமாது எனும்
தேவிமாரொடும் தேவர்கள் யாவர்க்கும்
ஆவியும், அறிவும், முதல் ஆயவன்
வாவி மா மலர்ப் பாதம் வணங்கினாள்.

     மேவி - (திருமால் கோயிலை) அடைந்து;  மென்மலராள் -
மென்மையான செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள்;  நிலமாது -
பூதேவி;  எனும் - என்கின்ற; தேவிமாரொடும் - இரு தேவியரொடும்; 
தேவர்கள் யாவர்க்கும் - எல்லாத் தேவர்களுக்கும்; ஆவியும் - உயிரும்; 
அறிவும் - ஞானமும்;  முதலும் - ஆதியும்;  ஆயவன் - ஆகிய
திருமாலினது; வாவி மாமலர் - பொய்கையில் பூத்த  பெருமை பெற்ற
தாமரைமலர் போன்ற;  பாதம் - திருவடிகளை;  வணங்கினாள் -
வழிபட்டாள்.