பக்கம் எண் :

560அயோத்தியா காண்டம்

காட்டி - அவர்களைச் சான்றாகக் காட்டி; காண்டிர் - உம் கருத்தையும்
ஒப்புக் காண்பீர்களாக.

     காட்டிக் காண்டல் என்பது சான்றுரைத்து உறுதிசெய்தலாகும். ‘ஆல்’
அசை.                                                       16

2260.‘நல் நெறி என்னினும், நான் இந் நானில
மன் உயிர்ப் பொறை சுமந்து இருந்து வாழ்கிலேன்;
அன்னவன்தனைக் கொணர்ந்து, அலங்கல் மா முடி
தொல் நெறி முறைமையின் சூட்டிக் காண்டிரால்.

     ‘நான் -; நல் நெறி என்னினும் - (அரசு புரிவது) தரும நெறியே
என்று நீங்கள்சான்றுகளால் நிரூபித்த வழியும்; இந் நானில மன்
உயிர்ப்பொறை
- இப்பூமியில்உயிர்களைப் பாதுகாக்கும் சுமையை; சுமந்து
இருந்து வாழ்கிலேன்
- தூக்கி அரசனாக இருந்துவாழ உடன்
படமாட்டேன்; அன்னவன்தனைக் கொணர்ந்து - அந்த (அரசாட்சிக்குரிய)
இராமனைக் கொண்டு வந்து; அலங்கல் மாமுடி - மலர் மாலையோடு கூடிய
மகுடத்தை; தொல்நெறி முறைமையின் - தொன்று தொட்டு வரும் மரபு
வழிப்படி; சூட்டிக் கண்டிர் -(அவன் தலையில்) அணிவிக்கக் காணுங்கள்.’

     நாவாற்றலால் எதுவும் நியாயமாக்கப்பட்டுவிடும் என்பது கருதி
‘நல்நெறி என்னினும்’என்றான். ‘எது  எப்படி ஆயினும் என் கருத்து
இராமனை அழைத்துக் கொண்டுவந்து அரசன் ஆக்குதலே’என்றானாம்.
அதுவே மரபும் ஆகும் என்பதனை மீண்டும் ‘தொல்நெறி முறைமையின்’
என்றதனால்குறிப்பித்து, யான் சூடுதல் தொல்நெறி முறைமையன்று என்று
வற்புறுத்தினானாம். ‘உயிர்ப்பொறை’ என்றது மன்னர் தம்மனத்து
எப்போதும் தம் மக்களை இருத்தி அவர் நலம் நினைத்துக்காத்தாளுதல்
பற்றியாம். ‘ஆல்’ அசை.                                        17

2261.‘அன்று எனின், அவனொடும் அரிய கானிடை
நின்று, இனிது இருந் தவம், நெறியின் ஆற்றுவென்;
ஒன்று இனி உரைக்கின், என் உயிரை நீக்குவென்’
என்றனன்; என்றபோது; இருந்த பேர் அவை,

     ‘அன்று எனின் - (இராமனைக் காட்டிலிருந்து அழைத்து வந்து முடி
சூட்டல்) இயலாதுஆயின்; அவனொடும் - அந்த இராமனோடும்; அரிய
கானிடை
- வாழ்தற்கரியகாட்டிடத்து; நின்று - வாழ்ந்து;  இருந்தவம் -
பெரிய தவத்தை; இனிது -இனிமையாக; நெறியின் - செய்தற்குரிய
முறைப்படி; ஆற்றுவென் - செய்வேன்;  இனி -இதற்குமேல்; ஒன்று
உரைக்கின்
- (மாறாக) ஒன்றை நீங்கள் சொன்னால் (என்னை ஏற்றுநடத்த
வற்புறுத்தினால்); என் உயிரை நீக்கு வென் - என் உயிரை அழித்துக்
கொள்வேன்; என்றனன் - என்று