பக்கம் எண் :

562அயோத்தியா காண்டம்

மேதம், இராயசூயம் முதலிய) யாகங்களைச் செய்தும்; வளர்க்க
வேண்டுமோ?
- (நின்புகழைஇனி நீ) வளர்க்க வேண்டியதில்லை;
நின்புகழ் - (இத்தகைய நற்குண நற்செயல்களால்இப்போது  பெற்றுள்ள)
நின்புகழே; ஏழினோடு ஏழ்எனும் உலகம் எஞ்சினும் - பதினான்கு
உலகமும் அழிந்திட்டாலும்; வாழிய - வாழ்வதாக;’ என்று வாழ்த்தினார்-.

     வாழ்த்தினார் ‘அரசவையோர்’ என (2261.) முன்னைய பாடலின் இறுதிச்
சொற் கொண்டுமுடிக்க. செயற்கையால் பிறர்புகழ் தேடவேண்டும்; ஆனால்,
பரதனுக்கு இயற்கையாகிய குணம்செயல்களே பெரும்புகழுக்குக்காரணமாயின
என்று  பாராட்டுதல் அரசவையோர் கருத்தாகக் கொள்க.             20

இராமனை அழைத்துவருதல் பற்றி முரசு  
அறைவிக்கச் சத்துருக்கனனிடம் பரதன் கூறுதல்  

2264. குரிசிலும், தம்பியைக் கூவி, ‘கொண்டலின்
முரசு அறைந்து, “ இந் நகர் முறைமை வேந்தனைத்
தருதும் ஈண்டு” என்பது சாற்றி, தானையை,
“விரைவினில் எழுக!” என, விளம்புவாய்’ என்றான்.

     குரிசிலும் - பரதனும்; தம்பியைக் கூவி - (தன்) இளவலான
சத்துருக்கனனைஅழைத்து; கொண்டலின் - மேகம் போல; முரசு
அறைந்து
- இடியென ஒலிக்கும்முரசினை அடித்து; இந் நகர் முறைமை
வேந்தனை
- இந்நகரத்திற்கு மரபு வழிப்படி அரசனாகவேண்டிய
இராமனை; ஈண்டுத் தருதும்’ - காட்டிலிருந்து அயோத்திக்கு அழைத்து
வரப்போகிறோம்;  என்பது  சாற்றி - என்னும் செய்தியை அறிவித்து;
தானையை - நம்சேனைகளை; ‘விரைவினில் எழுக’ என - (இராமனை
அழைத்து வர) விரைவாகப் புறப்படுக என்று;விளம்புவாய்’ -
சொல்லுவாயாக;’ என்றான் - என்று கட்டளை இட்டான்.

     இராமனே அயோத்தியரசன் என்பதில் மாறாத கருத்துடையவன் பரதன்
ஆதலால், அரசனைஅழைக்கச் செல்லும் முறைப்படி சேனைகள் வரும்படி
பணித்தான் என்க. தனிமனிதரை அழைத்தற்கும்,அரசர்களை அழைத்தற்கும்
வேறுபாடு உண்டு. இனி, தானொருவனே சென்று அழைத்தால் இராமன்
வராதிருக்கவும் கூடும். தன் பிரிவினால் வருந்திக் கண்ணும்,  நீருமாய்
இருக்கும் இவ்வளவுபேரையும் கண்டால் மனம் இரங்கி வருவான் என்று
கருதி, சேனைகளையும், மக்களையும் உடன்வரப்பறையறைந்து தெரிவித்தான்
என்பதும் ஒன்று;  ஏற்பன அறிக.                                 21

சத்துருக்கனன் உரை கேட்ட மக்கள் மகிழ்ச்சி  

2265.நல்லவன் உரைசெய, நம்பி கூறலும்
அல்லலின் அழுங்கிய அன்பின் மா நகர்