பக்கம் எண் :

ஆறு செல் படலம் 563

 ஒல்லென இரைத்தலால் - உயிர் இல் யாக்கை அச்
சொல் எனும் அமிழ்தினால் துளிர்த்தது என்னவே.

    நல்லவன் உரை செய- நற்குணத்தாற் சிறந்த பரதன் பணிக்க; நம்பி-
சத்துருக்கனன்; கூறலும்
- (இராமனைஅழைத்து  வரும் செய்தியைச்)
சொல்லுதலும்; அல்லலின் - துன்பத்தால்; அழுங்கிய- இரங்கிக்கெட்ட;
அன்பின் மாநகர் - இராமன்பால் அயரா அன்பினை உடைய; அயோத்தி
மாநகர மக்கள்; உயிர் இல் யாக்கை- உயிர் இல்லாத உடம்புகள் எல்லாம்;
அச்சொல் எனும் அமிழ்தினால்- அந்த வார்த்தை என்னும் அமுதத்தால்;
துளிர்த்தது -(மீண்டும்  உயிர் பெற்றுத்) துளிர்விட்டது;  என்ன - என்று
சொல்லும்படி; ஒல்லென -பேராலி  உண்டாகுமாறு; இரைத்தது - மகிழ்ச்சி
ஆரவாரம் செய்தனர்.

     அழுங்கிய - இரங்கிக் கெட்ட “அழுங்கல் இரக்கமும் கேடும் ஆகும்”
(தொல். சொல், உரி.52.) என்பது காண்க; இரண்டினுள் ஒன்று  உரைக்கவும்
பெறும். உயிரற்ற உடம்பு துளிர்த்தாற்போலஎன்றது பட்ட மரம் துளிர்விடம்
பிழைத்தலாகும் ஆதலின் இங்கேயும் உயிர் வந்ததாக ஆகும்என்க.
துளிர்த்தல் என்பதால் உருவக அணியும், ‘என்ன’ என்ற உவம உருபால்
பின்னர் உவமையணியும்வந்துள்ளமை  காண்க. இவ்வாறு வருவனவற்றைக்
கலவையணி என்பர் அணிநூலார். “மொழியப்பட்டஅணிபல தம்முள் தழுவ
உரைப்பது சங்கீரணமே” (தண்டி). சஞ்சீரண அணி என்பது கலவையணியாம்.
‘ஆல்’ அசை.                                                 22

2266.அவித்த ஐம் புலத்தவர் ஆதியாய் உள
புவித்தலை உயிர் எலாம், ‘இராமன் பொன் முடி
கவிக்கும்’ என்று உரைக்கவே, களித்ததால் - அது
செவிப் புலம் நுகர்வது ஓர் தெய்வத் தேன்கொலாம்?

    அவித்த ஐம்புலத்தவர் ஆதியாய்- ஐம்புலன்களை
அடக்கியவர்களாகிய முனிவர்கள் முதலாக;  புவித்தலை உள உயிர்
எலாம்
-உலகத்திடத்து  உள்ள உயிர்கள் எல்லாம்; ‘இராமன் பொன்முடி
கவிக்கும்’
- இராமன்பொன்மயமான மகுடம் சூடப்போகிறான்; என்று
உரைக்கவே
என்று (முரசொலி மூலம்சத்துருக்கனன்) சொல்லவே;
களித்தது - பெரு மகிழ்ச்சி அடைந்தன; அது - அந்தச் சொல்;
செவிப்புலம் நுகர்வது  ஓர் தெய்வத் தேன்கொல் - செவி யென்னும்
பொறி,கேள்வி என்னும் புலம் அனுபவிக்கும்படியான ஒப்பற்ற
தெய்வத்தன்மை வாய்ந்த தேனோ?

     உயிர்களின் மகிழ்ச்சிக்குக் காரணமாகிய சொல்லைச் செவிநுகர்
தேனாகக் கற்பனைசெய்தது  தற்குறி்ப்பேற்ற வணியாகும். பொறிகளை
அவித்தவர் என்பதற்குப் புலன்களைஅவித்தவர் என்பது இலக்கணை.
பொறிகளின்வழி புலநுகர்ச்சிக்கு மனத்தைச் செல்லவிடாதுஅடக்கியவர்கள்
என்பது  கருத்து. ‘உயிர் எலாம்......களித்தது’ என்பது  ஒருமை பன்மை
மயக்கம்; தொகுதி ஒருமை என்றும் கொள்ளலாம். ஆல், ஆம் - அசைகள்.
கொல் -வினாப்பொருட்டு.                                      23