| | காசையின் கரியவற் காண மூண்டு எழும் ஆசையின் நிமிர்ந்தது அவ் அனிக ராசியே. |
‘ஒல்’ என் பேர் ஒலி - (சேனைகளின் எழுச்சியால் உண்டாகிய) ‘ஒல்’ என்றபெரிய ஆரவாரம்; ஈசன் - (அழித்தற் கடவுளாகிய) சிவன்; இவ் உலகினை அழிக்கும்நாள் - இந்த உலகினை அழித்துச் (சர்வ சங்காரம்) செய்யும் காலத்தில்; எழும்ஓசையின் - எழுகின்ற பேரோசையைவிட; நிமிர்ந்துளது - மேற்சென்றுளது; அவ்அனிகராசி - அந்தச் சேனைத் தொகுதி; காசையின் கரியவன் - காயாம்பூப் போலும் கருநிறமுடைய இராமனை; காண மூண்டு எழும் ஆசையின் - காண்பதற்காக உள்ளே கிளர்ந்து எழுகின்ற ஆசையைக் காட்டிலும்; நிமிர்ந்தது - மேற்சென்றுவிட்டது (அதிகமாய் உள்ளது.) ஈசன் என்பது சிவனுக்குரிய சிறப்புப் பெயர். “ஈசன் ஆண்டிருந்த பேர் இலங்கு மால்வரை”(3360.) என்பது காண்க. காசை - காயாம்பூ. “நீல நெடுங்கிரியும் மழைமுகிலும் பவ்வ நெடு நீரும்காயாவும் நிகர்க்கும் மேனிக், கோலமும்” (வில்லி. 45. 247.) என்பது திருமாலின் திருமேனிநிறத்துக்குக் காயாம்பூவை உவமை கூறிற்றாம். காசு- குற்றம் என்பார் உளர். ‘காசை’ என வருதலின் அது பொருந்தாது. ‘காசில்’ என்று வரின் பொருந்தும். ‘காசில் கொற்றத் திராமன்’என்பது (4) போல, காசு - ஐ எனப் பரித்து ‘ஐ’ சாரியை என்றாலோ எனின், அவ்வாறு சாரியைகூறுவது ஓர் மரபின்மையே அன்றி வேறின்றி. ஏற்குமேற் கொள்க. ‘ஓசையின்’, ‘ஆசையின்’இரண்டிடங்களிலும் ‘இன்’ உறழ்ச்சிப் பொருட்டு. ‘காசையின்’ ‘இன்’ உவமப் பொருட்டு. ‘ஏ’ காரம் ஈற்றசை. 27 | 2271. | படியொடு திரு நகர் துறந்து, பல் மரம் செடியோடு தொடர் வனம் நோக்கி, சீதை ஆம் கொடியொடு நடந்த அக் கொண்டல் ஆம் எனப் பிடியொடு நடந்தன - பெருங் கை வேழமே. |
பெருங்கை வேழம்- (சேனையில் உள்ள) பெரிய துதிக்கையையுடைய களிற்று யானைகள்; பிடியொடு - (தம்) பெண் யாணைகளுடனே; படியொடு திருநகர் துறந்து - பூவுலகஆட்சியோடு அழகிய அயோத்தி நகரத்தையும் விட்டு; செடியொடு பல்மரம் தொடர் வனம்நோக்கி - செடிகளோடு பல மரங்கள் ஒன்றை ஒன்று பற்றி நெருங்கியுள்ள காட்டை நோக்கி;சீதை ஆம் கொடியொடு - சீதாபிராட்டி யென்கின்ற கொடியுடனே; நடந்த - நடந்து சென்ற; அக் கொண்டல் ஆம் என - அந்த மேச நிறனாகிய இராமன் போல; நடந்தன - நடந்து சென்றன. யானைக்கு இராமனும், பிடிக்கும் பிராட்டியும் கொள்க. ‘ஏ’ காரம் ஈற்றசை. ‘கொண்டல்’என்பது இராமனுக்கு உருவகம். நிறத்தினால் அன்றிப் பயனாலும் (தன் அடைந்தோர்க்குத் தண்ணளிவிளைத்தலால்) இராமனுக்கு |