பக்கம் எண் :

568அயோத்தியா காண்டம்

கோலத்தை; காண்கிலா - காணப்பெறாத;  மாதரின் - பெண்கள் போல;
நுடங்குவ - அசைகின்றனவாயின.

     கொடிகள் வானளாவி மேகத்தைத் தொடுவதும், அசைவதும்
சேனைகளின் வெயில் வெம்மை தணிக்கமேகத்தின் குளிர்நீர்
தெளிப்பதாகவும், இராமன் முடிசூடும் கோலம் காணாத மகளிர் என
அசைவதாகவும் கற்பனை செய்யப்பெற்றன. தற்குறிப்பேற்றவணி,
உவமையணி என முறையே காண்க. கோதை- கையுறை. விற்போர் செய்வார்
கைகளுக்குத் தோலாற் செய்த உறை அணிவர். ‘ஏ’ காரம்ஈற்றசை.      30

2274.வெண் மதி மீச்செல மேகம் ஊர்ந்தென,
அண்ணல் வெங்கதிரவன், அளவுஇல் மூர்த்தி ஆய்,
மண்ணிடை இழிந்து ஒரு வழிக்கொண்டாலென,
எண்ண அரு மன்னவர் களிற்றின் ஏகினார்.

     எண்ண அரு மன்னவர் - கணக்கிட முடியாத அரசர்கள்; அண்ணல்
வெங் கதிரவன்
- பெருமை பொருந்திய வெப்பமுள்ள ஒளிக்கதிர்களை
உடைய சூரியன்;  அளவு இல் மூர்த்திஆய் - அளவுபடாத பல
வடிவங்களை எடுத்துக்கொண்டு;  மீ வெண்மதி செல - தன்மேலே
வெண்மதியானது  சென்றுகொண்டிருக்க;  மேகம் ஊர்ந்து - (தான்)
மேகத்தின் மேல்ஊர்தியாக ஏறி;  மண்ணிடை இழிந்து - பூமியில் இறங்கி;
ஒரு வழிக் கொண்டால் என- ஒரேவழியில் பயணம் செய்தாற் போல;
களிற்றின் ஏகினார் - (வெண்குடைநீழலில்) யானைமேல் சென்றார்கள்.

     பலவடிவு கொண்ட சூரியன் பல மன்னர்களுக்கும், மேல் செல்லும்
வெண்மதி மன்னர்மேல்நிழற்றிய வெண்குடைக்கும், மேகம் ஏற்றிச் செல்லும்
யானைக்கும் உவமையாயின, சூரியன்மண்ணில் இறங்கல் இல்லையாதலின்
இது அற்புதஉவமையணியாகும்.                                  31

2275.தேர்மிசைச் சென்றது ஓர் பரவை; செம்முகக்
கார்மிசைச் சென்றது ஓர் உவரி; கார்க்கடல்,
ஏர்முகப் பரிமிசை ஏகிற்று; எங்கணும்
பார்மிசைப் படர்ந்திது, பதாதிப் பௌவமே.

     ஓர் பரவை - (சேனை வீரர்களாகிய) ஒரு கடல்;  தேர் மிசைச்
சென்றது 
-தேர்மேல் சென்றது; ஓர் உவரி - (யானை வீரர்களாகிய) ஒரு
சமுத்திரம்;  செம்முகக் கார் மிசைக் சென்றது - சிவந்த (புள்ளிகளை
உடைய) முகத்தை உடைய மேகம்(போன்ற யானை) மேல் சென்றது;
கார்க்கடல் - கரிய (குதிரை வீரர்களாகிய) கடல்; ஏர்முகப் பரிமிசை
ஏகிற்று -
அழகிய முகத்தை உடைய குதிரைகளின்