‘திக்கு சிறிய’- திசைகள் இடம் போதாமல் சிறியன; எனச் சொல்லிய சேனையை - என்று பிறரைச்சொல்லச்செய்கின்ற (பேரளவுள்ள) இந்தச் சேனையை; சுமந்தது எனில் - (இந்தப் பூமி)சுமந்து கொண்டுள்ளது என்றால்; ஒல் ஒலி வேலை நீர் உடுத்த பாரை - ஒல்லென்றுஒலிக்கின்ற கடல் நீரை ஆடையாகச் சுற்றி உடுத்துக் கொண்டுள்ள பூமியை; மெல்லியல்- மென்மைத் தன்மை உடைய பெண் என்று சொன்னவர்கள்; மெலியர் கொல் - மெலியர்போலும். ‘பூதேவி - நிலமகள்’ என்று சொல்லும் வழக்குப் பற்றியது. “நிலம் என்னும் நல்லாள்”என்றார் (குறள்.1040.) வள்ளுவரும். மெல்லியல் பெருஞ்சுமையைத் தாங்க மாட்டாள் ஆதலின்,பூமியை மெல்லியல் என்றல் பொருந்தாது என்று சமத்காரமாகக் கூறிச் சேனையின் மிகுதியைப் புலப்படுத்தினார். ‘ஏ’ காரங்கள் அசை. ‘கொல்’ ஐயப்பொருட்டு. 36 | 2280. | தங்கு செஞ் சாந்து அகில் கலவை சார்கில, குங்குமம் கொட்டில, கோவை முத்து இல, - பொங்கு இளங் கொங்கைகள் - புதுமை வேறு இல தெங்கு இளநீர் எனத் தெரிந்த காட்சிய. |
பொங்கு இளங் கொங்கைகள் - (மகளிரது) பருத்துக் கொண்டுள்ள இளமையானதனங்கள்; தங்கு செஞ்சாந்து அகில் கலவை சார்கில - (தம்மிடம் பூசப்பெற்று எப்பொழுதும்) தங்கியிருக்கப்பெற்ற செஞ்சந்தனம், அகில் குழம்பு, கலவைச் சாந்து இவை(இப்போது) சாரப் பெறாமல்; குங்குமம் கொட்டில - குங்குமக் குழம்பு பூசப்பெறாமல்; கோவை முத்து இல - முத்துவடம் அணியாமல்; வேறு புதுமை இல - வேறு புதிய செயற்கை நலன்கள் இல்லாமல் (இருப்பதால்); தெங்கு - தென்னையின்; இளநீர்எனத் தெரிந்த காட்சிய - இளநீர்க் காய்கள் போலத் தோற்றம் உடையவாயின. சாந்து முதலியன அணியாமல் இருக்கிறபடியால், இளநீர்க் காய்களின் தோற்றம் அவ்வாறேபொருந்தியுள்ளது என்று கற்பனை செய்தார். 37 | 2281. | இன் துணையவர் முலை எழுது சாந்தினும் மன்றல் அம் தாரினும் மறைந்திலாமையால் துன்று இளங் கொடி முதல் தூறு நீங்கிய குன்று எனப் பொலிந்தன - குலவுத் தோள்களே. |
குலவுத் தோள்கள் - (ஆண்களின்) திரண்ட தோள்கள்; இன் துணைவர் -(அவர்களுடைய) இனிய மனைவியரது; முலை எழுது சாந்தினும் - முலை மேல் தொய்யில்எழுதப்பெற்ற சாந்தினால்; மன்றல் அம் தாரினும் - (தாமே அணியும்) மணம் வீசும்மாலையால்; மறைந்திலாமையால் - இப்பொழுது மறையாமல் (இயற்கையாக |