உள்ளபடி) விளங்கித் தோன்றுதலால்; துன்று இளங்கொடி முதல் - நெருங்கிய இளைய கொடிமுதலாகிய; தூறு நீங்கிய - புதர்கள் இல்லாமற் போன; குன்று என - மலைபோல;பொலிந்தன - தோன்றின. மகளிர் கோலம் செய்யாமை போல ஆடவரும் உள்ளனர் என்பதாம். இன்துணையவர் என்றது காதலியராகிய மனைவியரை. ‘ஏ’ ஈற்றசை. 38 | 2282. | நறை அறு கோதையர் நாள் செய் கோலத்தின் துறை அற, அஞ்சனம் துறந்த நாட்டங்கள் குறை அற நிகர்த்தன - கொற்றம் முற்றுவான். கறை அறக் கழுவிய கால வேலையே. |
நறை அறு கோதையர் - வாசனைப் புகை ஊட்டாத கூந்தலை உடைய மகளிர்; நாள்செய் கோலத்தின் துறை அற - நாள்தோறும் செய்யப்படுகின்ற அலங்காரத்தின் தன்மைகள்நீங்கினமையால்; அஞ்சனம் துறந்த - மை தீட்டப் பெறாத (இயற்கையான தோற்றத்தோடுஉள்ள) கண்கள்; கொற்றம் முற்றுவான் - (போர்செய்து) வெற்றியை முடித்த ஒருவன்; கறை அறக் கழுவிய - போர்காலத்துப் படித்த போன்ற வேற்படையை; குறை அற நிகர்ந்தன- குறைவில்லாமல் ஒத்திருக்கின்ற ஆயின. மை எழுதாத கண்கள் இரத்தக்கறை கழுவிய வேலைப் போன்றன. ‘ஏ’ காரம்ஈற்றசை. 39 | 2283. | விரி மணி மேகலை விரவி ஆர்க்கில தெரிவையர் அல்குல், தார் ஒலி இல்தேர் என பரிபுரம் ஆர்க்கில பவளச் சீறடி, அரிஇனம் ஆர்க்கிலாக் கமலம் என்னவே. |
தெரிவையர் அல்குல் - மகளிரது இடைப்பகுதி; தார் ஒலி இல் தேர் என -மணி ஒலி இல்லாத (அலங்கரிக்கப்பெறாத) தேர் போல; மணி விரி மேகலை விரவி ஆர்க்கில- மணிகள் பதிக்கப் பெற்ற மேகலை அணியப்பெற்றிலாமல் ஒலி யற்றவையாய் இருந்தன; பவளச் சீறடி - பவளம் போன்ற சிவந்த நிறம் வாய்ந்த சிறிய அடி; அரி இனம் ஆர்க்கிலாக் கமலம் என்ன - வண்டுக் கூட்டங்கள் ஒலிக்காத தாமரை மலர் போல; பரிபுரம் ஆர்க்கில - சிலம்புகள் ஒலிக்கப்பெறாமல், உள்ளன. இரண்டும் உவமையணி. ‘ஏ’ காரம் ஈற்றசை. 40 |