தொழில் செய்தல் மகிழ்ச்சியாம்; தொழில் செய்யாமல் சும்மா இருத்தல் துன்பமாம்;மன்மதன் தனக்கு வேலையின்மை கருதித் துயர்க்கடலில் மூழ்கினான் ஆம். ‘ஏ’ காரம்ஈற்றசை. 42 | 2286. | மண்ணையும், வானையும், வயங்கு திக்கையும் உண்ணிய நிமிர் கடல் ஒக்கும் என்பது என்? கண்ணினும் மனத்தினும் , கமலத்து அண்ணல்தன் எண்ணினும், நெடிது - அவண் எழுந்த சேனையே. |
அவண் எழுந்த சேனை - அயோத்தியில் (அப்போது) புறப்பட்ட சேனை; மண்ணையும், வானையும், வயங்கு திக்கையும் - பூமி, ஆகாயம், திசைகள் ஆகியவற்றையெல்லாம் ஒருசேர; உண்ணிய நிமிர் கடல் - உண்ணுதற்கு எழுந்த யுகாந்த காலக் கடலை; ஒக்கும் என்பது என் - ஒத்திருக்கும் என்று சொல்வது நிரம்பாதாகும்; கமலத்து அண்ணல் தன் - (படைப்புக் கடவுளாகிய) பிரமதேவனது; கண்ணினும், மனத்தினும், எண்ணினும் நெடிது - (படைத்த பொருளைக் காணும்) கண்ணையும், நினைக்கும்) மனத்தையும்,(நினைக்கின்ற) நினைப்பையும் கடந்து நீண்டதாகும். ‘உண்ணிய’ ‘செய்யிய’ என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்; ‘நிமிர்’ என்னும்வினைகொண்டு முடிந்தது. ‘ஏ’ காரம் ஈற்றசை. 43 | 2287. | அலை நெடும் புனல் அறக் குடித்தலால், அகம் நிலை பெற நிலை நெறி நிறுத்தலால், நெடு மலையினை மண் உற அழுத்தலால், தமிழ்த் தலைவனை நிகர்த்தது - அத் தயங்கு தானையே.1 |
அத் தயங்கு தானை - விளங்குகின்ற அந்தச் சேனை; அலை நெடும் புனல் அறக்குடித்தலால் - கடந் நீரை முற்றும் வற்றக் குடித்தலாலும்; அகம் நிலைபெற நிலைநெறிநிறுத்தலால் - பூமி இடம் (ஒரு புறம் சாயாது) நிலைபெறும்படி நிலையான முறையில் நிற்கச் செய்வதாலும்; நெடு மலையினை மண் உற அழுத்தலால் - பெருமலைகளை மண்ணிற் புகும்படிஅழுத்திவிடுதலாலும்; தமிழ்த் தலைவனை - தமிழன் தலைவனாகிய அகத்திய முனிவனை; நிகர்ந்தது - ஒத்துள்ளது. கடலைக் குடித்தல், பூமியை ஒருபாற் சாயாது நிறுத்தல், மலையை அழத்தல் மூன்றும்அகத்தியன் செய்த செயல்கள், சேனைகள் கடலைக் குடிக்கின்றன. பூமி எங்கும் இடமின்றிப்பரந்துள்ளபடியால் ஒருபால் சாயாது நிறுத்துகின்றன. மலைகள் மேலேறிச் செல்லும்போது சேனைப்பாரம் தாங்காமல் மலைகள் உள்ளே அழுந்துகின்றன; ஆதலால் மலைகளை அழுத்துகின்றன; எனவே, தமிழ்த் தலைவனை நிகர்த்தது சேனை என்றார். அகத்தியன் தமிழ்த் |