அப்படை செல் ஆறு - அந்தப் படைகள் செல்கின்ற வழி; பெருந்திரை நதிகளும்- பேரலைகளைக் கொண்ட நதிகளும்; வயலும் -; பெட்புறு - விரும்புதல் அமைந்த; மரங்களும் -; மலைகளும் -; மண்ணும் -; கண்ணுற - பக்கங்களில் கட் புலனாகத் தோன்ற, (அதனால்); அயோத்தி ஆம் தெய்வ மா நகர் - அயோத்தியாகிய தெய்வத் தன்மை வாய்ந்த பெரு நகரத்தின்; திருந்தல் இல் அருந்தெரு ஒத்தது - திருத்தமற்ற அரியதெருவைப் போன்றது. படைகள் செல்கிற வழியில் நதி, வயல், மரம், மலை, மண் காணப்படுவதால் ‘திருந்தல்இல் தெரு’ என்று உவமைப்படுத்தினர். படைகள் வீதியில் செய்வது வழக்கமாதலின் படைகள்செல்கின்ற இடத்தை வீதி போன்றது என்றார். மேற்செய்யுளில் அயோத்திநகர் வெறுமையானதைக் காட்டியது. இது படைசெல்லும் இடம் அயோத்தி நகரத் தெருப் போல மக்கள் கூட்டம் நிரம்பிவழிவதாயிற்று என்கிறது. ‘அரோ’ அசை. 46 | 2290. | ‘தார்கள் தாம், கோதைதாம், தாமம்தாம், தகை ஏர்கள்தாம், கலவை தாம், கமழ்ந்தின்று என்பரால் - கார்கள்தாம் என மிகக் கடுத்த கைம்மலை வார் கடாம் அல்லது, அம் மன்னன் சேனையே. |
அம் மன்னன் சேனை - (அந்தப் ) பரதன் ஏவிய சேனையில்; கார்கள்தாம் என- மேகங்களே என்று சொல்லும்படி; மிகக் கடுத்த கைம்மலை - மிகவும் பொருந்த அமைந்தயானைகள்; வார்கடாம் அல்லது - பெருகவிடும் மதசலம் அல்லது; ‘தார்கள் தாம், கோதை தாம், தாமம் தாம், ஏர்கள் தாம், கலவை தாம் - தார், கோதை, தாமம், பல்வசைச் சிறப்பான அழகுப்பொருள்கள், கலவைச் சாந்து (இவற்றின்); கமழ்ந்தின்று’ -மணம் வீசப் பெறவில்லை; என்பர் - என்று சொல்லுவர். தார் முதலிய அணியாமையின் அவற்றின் மணம் இல்லை என்றார். தார்- நெடுக ஆடவர்அணியும் மாலை, கோதை - மகளிர் தலையிற் சூடும் மாலை, தாமம் - வட்டமாலை என இவை மாலைவிசேடங்கள். ஒரோவழிப் பொதுப் பெயராகவும் இவை வழங்கும். கடுத்த என்பதை உவமைச் சொல்லாக்குக - கோபித்த யானை என்பதும் ஒன்று. ‘ஏ’ காரம்ஈற்றசை. 47 | 2291. | ஆள் உலாம் கடலினும் அகன்ற அக்கடல், தோள் உலாம் குண்டலம் முதல தொல் அணி கேள் உலாம் மின் ஒளி கிளர்ந்தது இல்லையால் - வாள் உலாம் நுதலியர் மருங்குல் அல்லதே. |
ஆள் உலாம் கடலினும் - மக்கள் மரக்கலத்தில் ஏறி உலாவுதற் கிடனாக உள்ளகடலைக்காட்டிலும்; அகன்ற அக்கடல் - விரிந்து |