பக்கம் எண் :

ஆறு செல் படலம் 577

பரந்துள்ள அச் சேனைக்கடலில்;  வாள் உலாம் நுதலியர் - ஒளி பரந்த
நெற்றியுடையமகளிரது; மருங்குல் அல்லது - (மின்னல் போன்ற) இடையே
அல்லாமல்; (வேறாகிய) தோள் உலாம் குண்டலம் முதல தொல் அணி -
தோளின்கண் தவழ்கின்ற காதணியாகிய குண்டலம்முதலாகிய பழமையாக
அணியும் அணிகளின்; கேழ் உலாம் மின் ஒளி கிளர்ந்தது இல்லை -
நிறம் விளங்குகின்ற மின்னல் ஒளி மிக்கு ஒளிர்வது இல்லை.

     பெண்கள் இடைமின்னல் ஒளி அன்றி, வேறு அணிகளின் மின்னொளி
இல்லை என்றபடி. கேழ் -நிறம்;  எதுகை நோக்கிக் கேள் என நின்றது.
‘கெழு’ என்னும்  உரிச்சொல் ‘கேழ்’ எனநின்றது. “குருவும் கெழுவும் நிறன்
ஆகும்மே” (தொல். - சொல். உரி. 5) என்பது காண்க.அக்கடல் என்றது
சேனையை;  உருவகம். ‘ஏ’ காரம் ஈற்றசை.                         48

2292.மத்தளம் முதலிய வயங்கு பல் இயம்
ஒத்தன சேறலின், உரை இலாமையின்,
சித்திரச் சுவர் நெடுஞ் சேனை தீட்டிய
பத்தியை நிகர்த்தது - அப் படையின் ஈட்டமே.

     அப் படையின் ஈட்டம் -அந்தச் சேனைத் தொகுதி; மத்தளம்
முதலிய வயங்கு பல்இயம் -
மத்தளம் முதலாகிய விளங்குகின்ற பல
வாத்தியங்கள்;  உரை இலாமையின் ஒத்தனசேறலின் - ஒலிக்காமல்
பொருந்திச் செல்கின்ற படியால் (ஒலியவிந்த படைச்செலவு); நெடுஞ் சுவர்-
நீண்ட சுவரில்;  சித்திரம் தீட்டிய - சித்திரமாக வரைந்த;  சேனைப்
பத்தியை நிகர்த்தது -
சேனை வரிசையை ஒத்துள்ளது.

     சேனை வரிசைப் படம் ஒன்று சுவரில் தீட்டப்பெற்றாற்போல
ஒலியவிந்த படைவரிசை செல்வதுஉள்ளது என்றார். ஒலிக்காமல்
இசைக்கருவிகளைச் சேனை சுமந்து  செல்வானேன் என்னில்,  இராமனை
அழைத்து  வரும்போது  இசைத்தற்கு வேண்டுதலின் இப்போது  உடன்
கொண்டு சென்றார்என்க.                                      49

2293.ஏடு அறு கோதையர் விழியின் எய்த கோல்
ஊடு உற உரம் தொளைத்து, உயிர் உணாவகை.
ஆடவர்க்கு அரும் பெருங் கவசம் ஆயது -
காடு உறை வாழ்க்கையைக் கண்ணன் நண்ணவே.

     கண்ணன் - கண்ணாற் செய்யப்படும் அருளிற் சிறந்தவனாகிய
இராமன்; காடு உறவாழ்க்கையை நண்ண - காட்டின்கண் வசிக்கும்
வாழ்க்கையை மேற்கொள்ள,  (அச்செயல்); ஆடவர்க்கு - ஆண்களுக்கு
எல்லாம்; ஏடு அறு கோதையர் - புறவிதழ் நீக்கிய மலர் கொண்டு
தொடுத்த மாலை அணிந்த மகிளிர்;  விழியின் எய்த கோல் -
கண்ணிலிருந்து எய்த காதற் பார்வை அம்பானது;  உரம்  ஊடு உறத்
தொளைத்து