பட்ட முறைமையில் ஆன வழிபாட்டை; நன்று இழைத்து - நன்றாகச் செய்து; அவண் -அவ்விடத்தில்; நல்ல தவர்க்கு எலாம் - நல்ல தவத்தோர்களுக்கெல்லாம்; கன்றுடைப்பசுவின் கடல் - கன்றோடு கூடிய பசுவின் கூட்டங்களை; நல்கினாள் - தானமாகக் கொடுத்தாள். ஸ்ரீ நாராயணனை வழிபட்டு, வழிபாட்டின் முடிவில் கோதானம் செய்தாள். 9 1408. | ‘பொருந்து நாள் நாளை, நின் புதல்வற்கு’ என்றனர், திருந்தினார்; அன்ன சொல் கேட்ட செய் கழல் பெருந் திண் மால் யானையான், ‘பிழைப்பு இல் செய் தவம் வருந்தினான் வருக’ என, வசிட்டன் எய்தினான். |
திருந்தினார் - (நூல்களில்) தேறியவர்களாகிய கணித நூல் அறிஞர்கள்; ‘நின்புதல்வற்கு - உன் மகனுக்கு, (முடி சூட்டுவதற்கு); பொருந்தும் - பொருத்தமான; நாள்- நல்ல நாள்; நாளை - நாளைக்கேயாகும்;’ என்றனர் - என்று சொன்னார்கள்; அன்ன சொல் கேட்ட - அந்த வார்த்தையைக் கேட்ட; செய்கழல் - புனைந்த வீரக்கழலணிந்த; பெருந்திண்மால் யானையான் - பெரிய வலிய மதமயக்கமுடைய யானையையுடையதயரதன்; ‘பிழைப்பு இல் செய்தவம் - தவறில்லாத தவத்தைச் செய்து; வருந்தினான்- வருத்திய மேனி உடைய வசிட்டன்; வருக என - வருக’ என்று அழைக்க; வசிட்டன்- வசிட்ட முனிவன்; எய்தினான் - வந்து சேர்ந்தான். திருந்தினார் என்றது கற்றறிவில் முற்றத்துறைபோய் அதன் பயனாய் வாழ்க்கையை முறைப்படுத்திக் கொண்டவர்கள். கடுமையான தவம் செய்தவன் என்பது தோன்ற ‘செய்தவம் வருந்தினான்’ என்று கூறினார். 10 இராமனுக்கு உறுதி கூறும்படி தயரதன் வசிட்டனை வேண்டுதல் 1409. | ‘நல் இயல் மங்கல நாளும் நாளை; அவ் வில் இயல் தோளவற்கு ஈண்டு, ‘வேண்டுவ ஒல்லையின் இயற்றி, நல் உறுதி வாய்மையும் சொல்லுதி பெரிது’ என, தொழுது சொல்லினான். |
(தயரதன் வசிட்டனைப் பார்த்து) ‘நல் இயல் மங்கல நாளும் நாளை - நல்ல இயல்புகளையுடைய( கோள் நிலை உடைய ) முகூர்த்த நாளும் நாளைக்கேயாகும்; (ஆதலால்) அவ் வில் இயல் தோளவற்கு- அந்த வில்பழகிய தோள் உடையவனாகிய இராமனுக்கு; ஈண்டு - இவ்விடத்தில்; வேண்டுவ- வேண்டியனவாய விரதம் முதலிய சடங்கு |