பக்கம் எண் :

கங்கை காண் படலம் 597

  சோனை பட, குடர் சூறை பட,
     சுடர் வாளொடும்
தானை பட, தன் யானை பட,
     திரள் சாயேனோ?

     போன - (நம்முடன்) வந்துள்ள;  படைத்தலை  வீரர் தமக்கு -
சேனையின்கண் உள்ள வீரர்களுக்கு; இரை போதா - (ஒருவேளைப்)
போர்க்கும் பற்றாத; இச்சேனை - இந்தப் (பரதனது) சேனை; கிடக்கிடு-
கிடக்கட்டும்; தேவர்வரின்- தேவர்களே (படையெடுத்து) வந்தாலும்; சிலை
மா மேகம்
- என் வில்லாகியகரிய மேகம்;  சோனை பட - அம்பு
மழையைச் சொரிய;  குடர் சூறைபட -எதிரிகளது  குடர்கள் சிதைந்து
அலைய;  தானை சுடர்வாளோடும் பட - எதிரிச் சேனைகள்தம்கையிற்
பிடித்த படைக்கலங்களோடும் இறக்க; தனி யானை பட - ஒப்பற்ற
யானைகள்அழிய; திரள் சாயேனோ - (அப்படைக்) கூட்டத்தை
நிலைகுலைக்காமல் விடுவேனோ?

     இரை என்பது உணவு. இங்கே வீரர்களுக்கு உணவாவது போர்
ஆதலின், ‘ஒருவேலைப் போர்’ எனப்பொருள் உரைத்தாம். ‘போன
படைத்தலை வீரர்’ இராம இலக்குவனர் என்றலும் ஒன்று. நம்மைத்தப்பிச்
சென்றாலும் இராம இலக்குவர்களோடு இரை போதா இச்சேனை என்றானாம்.
‘தேவர் வரின்’- வரினும் என்ற சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. ‘ஓ’
வினாப்பொருட்டு.                                            20

2323.‘நின்ற கொடைக் கை என்
     அன்பன் உடுக்க நெடுஞ் சீரை
அன்று கொடுத்தவன் மைந்தர் பலத்தை,
     என் அம்பாலே
கொன்று குவித்த நிணம்கொள் பிணக் குவை
     கொண்டு ஓடி,
துன்று திரைக் கடல்,
     கங்கை மடுத்து இடை தூராதோ?

     அன்று - (முடிசூட்டு விழா நிகழ இருந்த) அந்நாள்; கொடை நின்ற
கை -
(முடிசூட்டுவதற்கு முன்பு செய்யவேண்டிய தானம் முதலியவற்றைச்
செய்து) நின்ற திருக்கரங்களை உடைய;என் அன்பன்- என் அன்பிற்குரிய
இராமன்; நெடுஞ் சீரை உடுக்க - பெரியமரவுரியை உடுக்குமாறு;
கொடுத்தவள் - (அவனுக்குக்) கொடுத்தவளாகிய கைகேயியின்;  மைந்தர்
பலத்தை -
மகனார் ஆன பரதன் சேனையை;  என் அம்பால் கொன்று
குவித்த -
என்னுடையஅம்பினால் கொன்று குவியல் செய்த; நிணம்கொள்
பிணக்குவை
- கொழுப்பு  மிகுதிகொண்ட பிணங்களின் திரட்சியை;
கங்கை - இந்தக் கங்கா