பக்கம் எண் :

கங்கை காண் படலம் 609

பரதனைக் குகன் வணங்கிப் பாராட்டி நெகிழ்தல்  

2336. கேட்டனன், கிராதர் வேந்தன்;
     கிளர்ந்து எழும் உயிர்ப்பன் ஆகி,
மீட்டு்ம், மண் அதனில் வீழ்ந்தான்;
     விம்மினன், உவகை வீங்க;
தீட்ட அரு மேனி மைந்தன்
     சேவடிக் கமலப் பூவில்
பூட்டிய கையன், பொய் இல்
     உள்ளத்தன், புகலலுற்றான்;

    கிராதர் வேந்தன்- வேடர் தலைவனாய குகன்; கேட்டனன் -
(பரதன் சொல்லிய வார்த்தைகளைக்) கேட்டு; கிளர்ந்து எழும் உயிர்ப்பன்
ஆகி
- மேல் எழுந்து  மிகும் பெருமூச்சு உடையவனாகி;  மீட்டும் - (முன்
வணங்கியதோடு அன்றித்) திரும்பவும்; மண் அதனில் வீழ்ந்தான்-
பூமியில் விழுந்து  வணங்கி; உவகை வீங்க - மன மகிழ்ச்சி மேல் பெருக;
விம்மினன் - உடம்பு பூரித்து; தீட்ட அரு மேனி மைந்தன் -
எழுதலாகாததிருமேனியையுடைய பரதனது; சேவடிக் கமலப் பூவில் -
திருவடிகளாகிய தாமரை மலரில்; பூட்டிய கையன் - இறுக அணைத்த
கையுடனே; பொய்யில் உள்ளத்தன் - பொய்யற்ற புரைதீர்ந்த மனத்தால்;
புகலல் உற்றான் - சில வார்த்தைகள் சொல்லலானான்.

     ‘மீட்டும்’ - என்பதற்குத் ‘திரும்பவும் மண்ணில் விழுந்து வணங்கினான்’
எனப் பொருள்உரைத்து, உம்மையால் முன்பொருமுறை ‘அடி
வீழ்ந்ததோடன்றி’ என்றுரைத்து 2334 ஆம் பாடலில் ‘அடிவீழ்ந்தான்’
என்பது  குகன் செயலே என்பார் உளர். ‘மீட்டும்’ என்பதில் ‘ம்’ என மகர
ஒற்றுக் கொள்ளுதலும் கொள்ளாமையும் உண்டு.  இருவகைப் பாடத்தினும்
மகர  ஒற்றுக் இன்றிமீட்டு’ என்ற பாடமே சிறந்ததாகும். ஓசை நயம்
உணர்வார்க்கு ‘மீட்டு மண்’ என நிற்றலேஏற்புடைத்தென அறிவர். ‘மீட்டு’
என்பது  உயிர்ப்பை மீட்டு என உரை பெறும். பரதன் கூறிய
வார்த்தைகளைக் கேட்டுக் கிளர்ந்தெழும் உயிர்ப்பைப் பெற்ற குகன்,
அவ்வுயிர்ப்பை மீட்டுஇயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னரே வேறு
செயல் செய்யமுடியும். ஆதலின், அவ்வுயிர்ப்பைமீட்டு (10161, 10162
பாடல்களை இங்கு நோக்குக). மண்ணதனில் வீழ்ந்தான் என்றதுபொருந்தும்.
‘மீட்டும்’ என்று இருப்பினும் முன்பு வணங்கினான் இப்போது ‘மண்ணதனில்
வீழ்ந்தான்’ என்று அதன் வேறுபாட்டை உணர்த்துமே அன்றி வேறன்று.
மூத்தவனாகிய குகன் இப்போதுமண்ணில் வீழ்ந்து வணங்குதல் தகுமோ
எனின், இருவர் இணையும்போது முதற்கண் இளையோர் மூத்தோரை
வணங்குதலும், அவ்வாறு வணங்கிய இளையோரை மூத்தோரை
வணங்குதலும், அவ்வாறு வணங்கிய இளையோரை மூத்தோர் எடுத்துத்
தழுவி விசாரித்தலும் இயல்பு.  இங்கு,  தான் வந்த நோக்கத்தைப் பரதன்
கூறக் கேட்ட குகனுக்குப் பரதன் பரதனாகவே காட்சி அளிக்கவில்லை.
அவன் தம்பி முறையும்புலனாகவில்லை. அவனை ஆயிரம் இராமர்களுக்கும்
மேலாகவே கருதுகிறான். அதனால் ‘ஆயிரம் இராமர்நின்கேழ் ஆவரோ
தெரியின் அம்மா’ என்று வியந்து பேசுகிறான். ஆகவே, ஆயிரம்
இராமர்களுக்கும் மேம்பட்டவனாகப் பரதனை எண்ணிய