பக்கம் எண் :

கங்கை காண் படலம் 615

இலக்குவன் யாது செய்தனன் எனப் பரதன் குகனை வினாவுதல்  

2343. தூண்தர நிவந்த தோளான்
     பின்னரும் சொல்லுவான்! ‘அந்
நீண்டவன் துயின்ற சூழல்
     இதுஎனின், நிமிர்ந்த நேயம்
பூண்டவன், தொடர்ந்து பின்னே
     போந்தவன், பொழுது நீத்தது
யான்டு?’ என, இனிது கேட்டான்;
     எயினர்கோன், இதனைச் சொன்னான்;

     தூண்தர - தூணை ஒப்பாக;  நிவந்த தோளான் - உயர்ந்த
தோள்களை உடையபரதன்; பின்னரும் சொல்லுவான் - மீண்டும்
குகனைப் பார்த்துப் பேசுவான்; ‘அந்நீண்டவன் துயின்ற சூழல் இது
எனின்
- அந்த நெடியவனாகிய இராமன் உறங்கிய இடம்இது என்றால்;
நிமிர்ந்த நேயம் பூண்டவன் தொடர்ந்து பின்னே போந்தவன்- (அவ்
இராமனிடத்தில்) மேற்சென்ற மிகுந்த அன்பு கொண்டு அவனைத் தொடர்ந்து
அவன் பின்னேயேவந்தவனாகிய இலக்குவன்; பொழுது  நீத்தது - இரவுப்
பொழுதைக் கழித்தது; யாண்டு?’- எவ்விடத்தில்?; என - என்று; இனிது
கேட்டான்
- இனிமையாக வினாவினான்;எயினர்கோன் - வேட
வேந்தனாய குகன்; இதனைச் சொன்னான் - இந்த விடையைக்கூறினான்.

     நெடியோன் என்று இராமனைப் பலவிடங்களிலும் கம்பர் குறிப்பர்.
அதனால் நீண்டவன்என்றார். நிமிர்தல் மேல் செல்லுதல் ஆதலின் உயர்ந்த
அன்பு என்றாகும். இலக்குவனைப்பற்றிவினாவுகிறபோது பரதனுக்கு ஏற்படும்
உள்ள நெகிழ்வைப் புலப்படுத்தவே ‘இனிது கேட்டான்’என்றார்.        41

இலக்குவன் செயல்பற்றிக் குகனது விடை  

2344. ‘அல்லை ஆண்டு அமைந்த மேனி
     அழகனும் அவளும் துஞ்ச,
வில்லை ஊன்றிய கையோடும்,
     வெய்து உயிர்ப்போடும், வீரன்,
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய்!-
     கண்கள் நீர் சொரிய, கங்குல்
எல்லை காண்பு அளவும் நின்றான்;
     இமைப்பிலன் நயனம்’ என்றான்.

    ‘கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய்!- மலையைக் கீழ்ப்படுத்தி
உயர்ந்ததோள்களை உடையவனே!;  அல்லை ஆண்டு அமைந்த மேனி