என்பத்தை- என்று (குகன் ) சொன்னதை; கேட்ட மைந்தன் - கேட்ட பரதன்; இராமனுக்குஇளையார் என்று - இராமனுக்குத் தம்பிகள் என்று சொல்லும்படி; முன்பு ஒத்ததோற்றத்தேமில் - பிறக்கும்பொழுது ஒத்த தன்மையான பிறப்பைப் பெற்ற எங்கள்இருவரிலும்; யான் - பரதனாகிய யான்; என்றும் முடிவு இலாத துன்பத்துக்கு ஏது ஆனேன்- எக்காலத்தும் கரைகாணாத பெருந்துன்பத்தை இராமன் அடைதற்குக் காரணமாக ஆய்விட்டேன்; அவன் -அந்த இலக்குவன்; அது - அத்துன்பத்தை; துடைக்க நின்றான் - இராமனிடமிருந்து நீக்கத் துணையாக இராமனுடன் நின்றான்; அன்புக்கு எல்லை உண்டோ? - அன்புக்கு ஒரு வரையறை உள்ளதோ; என் அடிமை அழகிது’ - நான் இராமனுக்குச் செய்யும் அடிமைத்திறம்நன்றாயிருந்தது; என்றான் - என்று கூறினான். “அன்பத்துக்கு எல்லை உண்டோ” இலக்குவன் செயல் குறிதத்து. ‘என்பது’ ‘என்பத்து’ எனவிரித்தல் விகாரம் செய்யுள் நோக்கி வந்தது. அன்புக்கு என்பது அன்பத்துக்கு என அத்துச்சாரியை பெற்றது. பிறப்பால் இருவரும் ஒரு தன்மையர் ஆயினும் அவன் சிறப்பாகிய அன்பினால் எல்லையின்றி உயர்ந்தான்; யான் அடிமையில் தாழ்ந்தேன் என்று பரதன் தன்னை நொந்துகூறினான். 43 கங்கையின் தென்கரை சேர்க்கக் குகனைப் பரதன் வேண்டல் | 2346. | அவ் இடை, அண்ணல்தானும், அன்று, அரும் பொடியின் வைகி, தெவ் இடைதர நின்று ஆர்க்கும் செறி கழல் புளிஞர் கோமா அன்! இவ் இடை, கங்கை ஆற்றின் ஏற்றினை ஆயின், எம்மை வெவ் இடர்க் கடல் நின்று ஏற்றி, வேந்தன்பால் விடுத்தது’ என்றான். |
அண்ணல் தானும்- பரதனும்; அவ் இடை - அந்த இடத்தில்; அன்று - அன்றையிரவு; அரும்பொடியின் வைகி- தற்குதற்கியலாத புழுதி மண்ணில் தங்கியிருந்த, (பொழுதுவிடிந்ததும்); ‘தெவ் இடை தர - பகைவர்கள் தோற்றோடும்படி; நின்று ஆர்க்கும்செறிகழல்- தங்கி ஒலிக்கும் கட்டப்பட்ட வீரக்கழல் அணிந்த; புளிஞர் கோமாஅன்! -வேடர்களுக்கு அரசனாகிய குகனே!; இவ் இடை - இந்த நேரத்தில்; கங்கை ஆற்றின்- கங்கை ஆற்றிலிருந்து; எம்மை ஏற்றினை ஆயின்- எம்மைப் கரையேற்றிச் (தென்கரை)சேரச் செய்தால்; வெவ இடர்க்கடல் நின்று ஏற்றி - கொடிய துயரக் கடலிலிருந்துகரையேற்றி; வேந்தன்பால் விடுத்தது’ - இராமன்பால் அனுப்பியது ஆகும்;’ என்றான்- என்று சொன்னான். |