பக்கம் எண் :

620அயோத்தியா காண்டம்

  ‘எந்தை! இத் தானைதன்னை ஏற்றுதி,
     விரைவின்’ என்றான்.

    சிருங்கி பேரியர் கோன்- சிருங்கிபேரம் என்னும் நகரில்
உள்ளார்க்கு அரசன் ஆகிய குகன்;  (பரதனை நோக்கி) ‘வரிசிலைக்
குரிசில் மைந்த
- கட்டமைந்த வில் தொழிலிற் சிறந்த தயரத குமாரனாகி
பரதனே!; வரம்பு இல் நாவாய் வந்தன - கணக்கில்லாத படகுகள்
வந்துள்ளன; சிந்தனையாவது’ - (உன்) மனக்கருத்து என்ன?; என்று
செப்ப - என்று சொல்ல; சுந்தரவரிவில்லானும் - அழகிய கட்டமைந்த
வில்லானாகிய பரதனும்; சுமந்திரன் தன்னைநோக்கி - (மதியமைச்சருள்
மூத்தோனாகிய) சுமந்திரனைப் பார்த்து; ‘எந்தை - என்தந்தையே!;
இத்தானை தன்னை - இச்சேனைகளை; விரைவின் ஏற்றுதி’-விரைவாகப்
படகில் ஏற்றுக; என்றான் - என்று சொன்னான்.

     சிருங்கி பேரன் என்பது குகனது நாட்டின் தலைநகரம். ‘வரிசிலைக்
குரிசில்’ என்று தயரதனைக் கூறியதற்கேற்பச் ‘சுந்தர வரிவிலானும்’ என்று
இப் பாடலிலேயே பரதனைக் குறிப்பிட்டது ஒரு நயம். சுமந்திரன் தேர்
ஒட்டுதலில் வல்லவன்; அமைச்சன்; தயரதனுக்கு மிகவும் அணுக்கமானவன்.
ஆதலின், அவனைத் தன் தந்தையெனவே கொண்டு கூறினான் பரதன்.
எந்தை - அண்மைவிளி.                                         47

2350. குரிசிலது ஏவலால், அக்
     குரகதத் தேர் வலானும்,
வரிசையின் வழாமை நோக்கி, மரபுளி
     வகையின் ஏற்ற,
கரி, பரி, இரதம், காலாள்,
     கணக்கு அறு கரை இல் வேலை,
எரி மணி திரையின் வீசும் கங்கை யாறு
     ஏறிற்று அன்றே!

    குரிசிலது ஏவலால்- பரதனது கட்டளையால்; அக் குரகதத்
தேர்வலானும்
- குதிரைகள் பூட்டிய தேரைச்செலுத்தலில் வல்ல
அச்சுமத்திரனும்; வரிசையின் வழாமை நோக்கி
- முறைப்படி தவறாமல்
பார்த்து; மரபுளி வகையின் ஏற்ற - அவரவர்க்குள்ள மரபுகளின்படி
(படகுகளில்)ஏற்றியனுப்ப; கரி, பரி,  இரதம்,  காலாள் - யானை,
குதிரை,  தேர்,  வீரர் என்றுசொல்லப்பெறும்; கணக்கு அறு -
எண்ணிக்கையில் அளவுபடாத;  கரை இல் வேலை - கரையற்றசேனைக்
கடல்; எரிமணி திரையின் வீசும் - ஒளிவீசும் மணிகளை அலைகளால்
(கரைக்கண்)எறிகின்ற; கங்கை யாறு - கங்கையாற்றை; ஏறிற்று - கடந்து
அக்கரை சென்றுஏறியது.

     முன்செல்வார், பின்செல்வார் என்ற முறையும், நாவாயில் முன்
அமர்வோர், பின் அமர்வோர், இருப்போர், நிற்போர், தனித்து
ஏற்றப்படுவோர்,