பக்கம் எண் :

கங்கை காண் படலம் 633

இராம இலக்குவர்கள்; நாடு இறந்து - கோசல நாடு கடந்து; காடு
நோக்கி
-வனத்தை நோக்கி; பெயர்ந்ததுவும் - புறப்பட்டுச் சென்றதுவும்;
நலம் ஆயிற்று ஆம்அன்றே! - (இத்தகைய சிறந்த சகோதரனைத்
தருதலால்) நன்மைக்குக் காரணமாயிற்றல்லவா!; விலங்கல் திண்தோள் கை
வீரக் களிறு அனைய காளை
- மலை போன்ற வலிய தோளைஉடைய
துதிக்கையாற் செய்யும் வீரச் செயலை உடைய ஆண் யானையை ஒத்த
ஆண் மகனாகிய; இவன்தன்னோடும் - இந்தக் குகனோடும்; கலந்து -
ஒன்றுபட்டு;  நீவிர் ஐவீரும் -நீங்கள் ஐந்து பேரும்; அகல் இடத்தை -
அகன்ற பூமியை; நெடுங்காலம் -நீண்டகாலம்; அளித்தீர்’ - அரசாட்சி
செய்து காப்பாற்றுவீர்களாக; என்றாள்- என்று சொன்னாள்.

     ‘மைந்தீர்’! என்ற விளி பரத சத்துருக்கனர்களை நோக்கியது;
குகனையும் உள்ளடக்கிக்கூறலும் ஒன்று, இதுகாறும் இராமன் வனம்
புகுந்தது கொடிது என்று அனைவரும் கருதினர். ஆதலால், குகன் என்கின்ற
சிறந்த துணைவனை அச்செயல் தந்தபடியால் (கைகேயி செய்த அச்)
செயலும் நல்லதாயிற்று அன்றோ என்றாளாம். இது குகனைப் பாராட்டி
உரைத்தது. “ஐவீரும் ஒருவீராய்” என்றதுகுகனை ஆசி கூறியதாக
அமையும். ‘ஐவீரும் என்று குகனுக்கே கோசலையால் இவ்வாசி கிடைத்தது
என்பதுஉணரற்பாலது. இராமனைக் காட்டுக்கு அனுப்பியதில்
கைகேயிமாட்டுக் குகனுக்கு இருந்த சீற்றத்தையும்கோசலை இதனால்
மாற்றித் தேற்றினள் என்னலாம்.                                  66

சுமித்திரையைப் பரதன் குகனுக்கு அறிமுகம் செய்தல்  

2369. அறம் தானே என்கின்ற அயல் நின்றாள்தனை
     நோக்கி, ‘ஐய! அன்பின்
நிறைந்தாளை உரை’ என்ன, ‘நெறி திறம்பாத்
     தன் மெய்யை நிற்பது ஆக்கி
இறந்தான்தன் இளந் தேவி; யாவர்க்கும்
     தொழு குலம் ஆம் இராமன் பின்பு
பிறந்தானும் உளன் என்னப் பிரியாதான் தனைப்
     பயந்த பெரியாள்’ என்றான்.

    அறம் தானே என்கின்ற அயல் நின்றாள் தனை- அறக்கடவுளே
என்று சொல்லத் தக்கவளாய்ப் பக்கத்தில் நின்ற சுமித்திரா தேவியை;
நோக்கி
- (குகன்) பார்த்து; ‘ஐய! - பரதனே!; அன்பின் நிறைந்தாளை-
அன்பால் நிறைந்த கொள்கலமாகிய இப் பெருமாட்டியை; உரை’ - (யார்
என்று எனக்குச்)சொல்; என்ன - என்று கேட்க; (பரதன்) ‘நெறி திறம்பா-
சத்திய வழியில்சிறிதும் மாறுபடாத; தன் மெய்யை - தன் வாய்மையை;
நிற்பது  ஆக்கி - என்றும் நிலைபெறுவதாகச்செய்து; இறந்தான்தன் -
தன் (மெய் எனும் பொய்யுடலைக் கைவிட்டு) இறந்தவனாகியதயரதனது;
இளந்தேவி - இளைய பட்டதரசியாவாள்; (அதன்