மேலும் இவள்) யாவர்க்கும் - எல்லா மக்களுக்கும்; தொழுகுலம் ஆம் இராமன் -வணங்கத்தக்க குல தெய்வமாகிய இராமனுக்கு; பின்பு பிறந்தானும் உளன் என்ன - பின்னேபிறந்த தம்பியும் (ஒருவன்) உளம் என்று அனைவரும் அறிந்து சொல்லுமாறு; பிரியாதான் தனை- (இராமனை விட்டு) நீங்காத இலக்குவனை; பயந்த - பெற்றெடுத்த; பெரியாள்’ -பெருமை உடையவள்; என்றான் - என்று சொன்னான். சொன்னான். சுமித்திரை இலக்குவனுக்கு “ஆகாததன்றால் உனக்கு அவ்வனம் இவ்வயோத்தி, மாகாதல் இராமன்அம் மன்னவன்....தாயர் சீதை என்றே ஏகாய்” என்றும், “மகனே இவன்பின் செல் தம்பிஎன்னும்படி அன்று; அடியாரின் ஏவல் செய்தி” (1751, 1752) என்றும் அறவுரைகளை அறிந்து கூறியவள் ஆதலின் அறத்தின் வடிவம் எனப்பட்டாள். பின்பு பிறந்தார் மூவாராயினும் பரதனும்சத்துருக்கனனுமாகிய தாம் இராமனுக்குத் துன்பம் உண்டாகக் காரணமானோமே என்ற ஏக்கறவால்,‘பின்பு பிறந்தானும் உளன் என்னப் பிரியாதான்” என்று இலக்குவனைச் சிறப்பித்தான். குகன் இலக்குவனை அறிந்து. அவனையே இராமனாகக் கருதி, ‘தேவா நின்கழல் சேவிக்க வந்தனன்’ (1963)ன்று முன்னர்க் கூறியவன் ஆதலின் அவனை வைத்துச் சுமித்திரையை அறிமுகப்படுத்தினான் பரதன்.அருகிருக்கும் சத்ருக்கனனும் அவள் மகன் ஆயினும் அவன் தன்னைச் சார்ந்திருந்துவிட்டபடியால்இலக்குவனைப் பெற்றதையே அவள் பெருமையாகக் குறித்தாளாம். இவையனைத்துமே பரதன் சொல்லிலும் செயலிலும் தன்னிரக்கத்தைப் பெரிதும் காட்டுவனவாய் அமைகின்றன. ‘பெரியாள்’ என்றுகோசலைக்குக் கூறிய பெயரையே இங்கும் கூறியது கொண்டு கம்பர் வாக்கின் அருமை அறிந்து மகிழலாம். 67 குகன் கைகேயியை யார் என வினவுதல் 2370. | சுடு மயானத்திடை தன் துணை ஏக, தோன்றல் துயர்க் கடலின் ஏக, கடுமை ஆர் கானகத்துக் கருணை ஆர்கலி ஏக, கழல் கால் மாயன் நெடுமையால் அன்று அளந்த உலகு எல்லாம், தன் மனத்தே நினைந்து செய்யும் கொடுமையால், அளந்தாளை, ‘“ஆர் இவர்?” என்று உரை’ என்ன, குரிசில் கூறும்; |
(பின்னர்க் குகன்) தன் துணை கடு மயானத்திடை ஏக - தன் கணவனாய தயரதன்(இறந்தாரைச்) சுடுகின்ற சுடுகாட்டிடத்தே செல்ல; தோன்றல் - (தன் மகனாகிய) பரதன்;துயர்க் கடலின் ஏக - துன்ப வெள்ளத்தினிடையே செல்ல; கருணை ஆர்கலி - அருட்கடலாகிய இராமன்; கடுமை ஆர் கானகத்து ஏக - கொடுமை பொருந்திய காட்டிடத்தே செல்ல;(இவ்வாறு செய்து) கழல்கால் மாயன் - கழலணிந்த காலையுடைய திருமால்; நெடுமையால் -(வாமனனாக வந்த மாவலி) |