பக்கம் எண் :

கங்கை காண் படலம் 635

பால் மூவடி மண் கேட்டுப் பின்னர் எடுத்த) நெடிய திருவுருவத்தால்;
அன்று
-முற்காலத்தே; அளந்த உலகு எல்லாம் - மூவடியில் ஈரடியால்
அளந்த எல்லா உலகங்களையும்; (திருமால் போல அவதாரம் எடுத்துச்
சிரமப்படாது) தன் மனத்தே நினைந்து செய்யும்கொடுமையால்
அளந்தாளை
- தன் மனத்தின்கண் தானே எண்ணிச் செய்கிற
கொடுமையினால்(எளிதாக) அளவு செய்தவளாகிய கைகேயியை;  “ஆர்
இவர்” என்று உரை’ என்ன-
இவர் யார்என்று சொல்லுக என்று கேட்க;
குரிசில் - பரதன்; கூறும் - சொல்வான்ஆயினன்.

     “சுற்றத்தார் தேவரொடும் தொழ நின்ற கோசலை” என்று
கோசலையையும், “அறந்தானேஎன்கின்ற அயல் நின்றாள்” என்று
சுமித்திரையையும் கூறிய கம்பர், ஒரு பாடல் முழுதுமாகக்கைகேயியின்
கொடு மனத்தைக் கூறிப் பரதனுக்கும் மேலாகத் தன் ஆற்றாமையைப்
புலப்படுத்தினார்எனலாம். ‘இவர் யார்’ என்று கோசலையை வினாவி,
‘அன்பின் நிறைந்தாளை உரை’ என்றுசுமித்திரையை வினாவிய குகனை
‘ஆர்  இவர்’ என்று சுட்டின்முன் வினாவை வைத்து வினாவச் செய்த
கம்பரின் சொல்நயம் உணரத்தக்கது. மற்றவரோடு அவள் இசைவொட்டாது
நின்றபடியைக் குகன்கண்டுகொண்டதை இந்த வினா வேறு பாடு காட்டி
நிற்கும்.  திருமால் மிக அரிது  முயன்று செய்தசெயலை இவள் எளிதாகச்
செய்தாள் என்றார் கம்பர். இராமாவதார நோக்கத்தை நிறைவேற்றியவன்
அவள் அன்றோ என்பதை நினைத்தார் போலும்.                    68

பரதன் கைகேயியைக் குகனுக்கு அறிமுகம் செய்தல்  

2371. ‘படர் எலாம் படைத்தாளை, பழி வளர்க்கும்
     செவிலியை, தன் பாழ்த்த பாவிக்
குடரிலே நெடுங் காலம் கிடந்தேற்கும்
     உயிர்ப் பாரம் குறைந்து தேய,
உடர் எலாம் உயிர் இலா எனத் தோன்றும்
     உலகத்தே, ஒருத்தி அன்றே,
இடர் இலா முகத்தாளை, அறிந்திலையேல்,
     இந் நின்றாள் என்னை ஈன்றாள்.’

     ‘படர் எலாம் படைத்தாளை - துன்பங்களை எல்லாம்
உண்டாக்கினவளை;  பழிவளர்க்கும் செவிலியை - உலக நிந்தை
என்கின்ற பழியாகிய குழந்தைக்கு வளர்ப்புத் தாயை; தன் பாழ்த்த பாவிக்
குடரிலே
- தனது பாழான தீவினையுடைய வயிற்றில்; நெடுங்காலம்
கிடந்தேற்கும்
-நீண்டநாள் (பத்துத் திங்கள்) தங்கியிருந்த எனக்கும்;
உயிர்ப்பாரம் குறைந்து தேய - உயிர் என்கின்ற சுமை குறைந்து
தேயும்படி;  உடர் எலாம் உயிரிலாஎனத் தோன்றும் உலகத்தே -
உடல்கள் எல்லாம் உயிரில்லாதன என்று தோன்றும்படி உள்ள
உலகத்தின்கண்; ஒருத்தி அன்றே இடரிலா முகத்தாளை - இவ் ஒருத்தி
மட்டும் அல்லவாதுன்பமே இல்லாத முகம் உடையவள்;