13. திருவடி சூட்டு படலம் ‘இராமனைக் காட்டிலிருந்து அயோத்திக்கு அழைத்து வந்து அரசன் ஆக்குவேன்’ என்று சொல்லிப் பரதன், தாயர், அரசச் சுற்றத்தினர், நகரமடாந்தர்ஆகியயோருடன் கங்கை கடந்து சென்று இராமனைக் கண்டு அழைக்கிறான். அவன் மறுக்கவே அவனது திருவடிநிலைகளை வேண்டிப் பெற்றுத் தன் தலைக்கணியாகச் சூட்டிக்கொள்கிறான். அயோத்திஅரசுக்குத் திருவடியைச் சூடடுகிறான் ஆதலின், திருவடி சூட்டு படலம் எனப்பெற்றது. பரதன் தன் முடியில் திருவடியைச் சூட்டிக் கொளும் படலம் என்பதினும், அயோத்திக்குஇராமபிரான் திருவடியைச் சூட்டுகிற படலம் என்பது சிறப்புடையது. திருவடிநிலையாகிய பாதுகையைத்திருவடி எனவே வழங்கல் உபசார வழக்கம் ஆம். ஆன்றோர் வழக்கு எனினும் அமையும். ஆன்றோர்வழக்கே சம்பிரதாயம் எனவும் பெறும். பரதன் பரத்துவாச முனிவனைக் காணுதலும், அவன் வந்த செய்தி கேட்டு மனம் மகிழ்தலும்,அனைவரும் அங்கே விருந்து அயர்தலும், பரதன் காய், கனி உண்டு வெறுநிலத் துறங்கலும், மீண்டும்புறப்பட்டுச் சித்திரக்கூடத்தைச் சேர்தலும், பரதன் வருகையை இலக்குவன் ஐயுற்றுச் சீற்றம்அடைதலும், போர்கோலம் பூண்ட இலக்குவனை மறுத்து இராமன் தெளிவித்தலும், தன்னை அணுகியபரதன் திருமேனி நிலை கண்டு அவன் நிலையை இராமன் இலக்குவற்குக் காட்டுதலும், இலக்குவன்நெஞ்சழிந்து வருந்தலும், தந்தை இறந்தமை கேட்டு இராமன் புலம்பலும், வசிட்டன் தேற்றுதலும், இராமன் தந்தைக்கு நீர்க்கடன் செய்தலும், பரதன் சீதையின் பாதங்களில் வீழ்ந்து புலம்பலும், தந்தை தயரதன் இறந்தமை இராமனால் அறிந்த சீதை வருந்தலும், அவள் நீராடிஇராமனை அடைதலும், தாயரும் இராமனும் சந்தித்து வருந்தலும், மறுநாற் யாவரும் ‘சூழ்ந்திருக்கஇராமன் பரதனை விரதவேடம்’ பூண்டமை பற்றி வினாவலும், பரதன் இராமனே அரசனாக வேண்டும்என்ற தன்கருத்தை விளக்கி உரைத்தலும், பரதன் வேண்டுகோளை இராமன் மறுத்துரைத்தலும், பரதனைஅரசாள இராமன் ஆணையிடலும், பரதனைத் தடுத்து வசிட்டன்இராமனிடம் அரசேற்க மொழிதலும், அதனையும் இராமன் மறுத்தலும், பரதன் காடுறைவதாகக் கூறலும், அவ்வளவில் இமையவல் பரதனை நாடாளவேண்டும் என மொழிதலும், பின்னர் வேறு செயலின்றிப் பரதன் இராமனது திருவடிநிலைகளை வேண்டிப்பெற்று ‘மீளுதலும், நந்திக் கிராமத்தில் இராமன் திருவடிநிலை அரசுசெலுத்த விரததவவேடத்துடன் புலன்களை அவித்துப் பரதன் இருத்தலும், இராமன் சீதையோடும் இலக்குவனோடும் தென்திசை வழிக்கொண்டு சேறலும் இப்படலக் செய்திகள் ஆகும். |