பொருளாம் ஆதலின், வேத நாயகன் என்றாம். “வேத நாயகனே உன்னைக் கருணையால் வேண்டி,விட்டான்” (7424.) என்பதும் காண்க. இனி, மறையின் கேள்வன் என்பது பரத்துவாச முனிவனைக்குறித்துக் கூறியதாகக் கோடலும் ஆம். அப்பொழுது ‘மன்’ என்பதற்கு இராமன் என உரைக்க.இராமனோடு வனத்துறைதல், இராமனை இணைபிரியாது சேர்ந்துறைதல் இரண்டும் அடங்க ஒருங்கு, உடன்என்று இருசொற்கள் பெற்தார். 4 2379. | உரைத்த வாசகம் கேட்டலும், உள் எழுந்து இரைத்த காதல் இருந் தவத்தோர்க்கு எலாம், குரைத்த மேனியோடு உள்ளம் குளிர்ந்ததால் - அரைத்த சாந்து கொடு அப்பியது என்னவே. |
உரைத்த - (இவ்வாறு பரதன்) கூறிய; வாசகம் கேட்டலும் - மனத்திறந்தசொற்களைக் கேட்ட அளவில்; உள் எழுந்து இரைத்த காதல் - (இராமனிடத்தில்)உள்ளேயிருந்து புறப்பட்டுப் பொங்கிய அன்பினை உடைய; இருந்தவத்தோர்க்கு எலாம் - பெரிய தவமுனிவர்களுக்கு எல்லாம்; அரைத்த சாந்து கொடு அப்பியது என்ன- நன்றாகஅரைத்த சந்தனத்தைத் கொண்டுவந்து பூசியதுபோல; குரைத்த மேனியொடு உள்ளம் -பூரித்தஉடம்போடு மனமும்; குளிர்ந்தது - குளிர்ச்சி அடைந்தது. தவத்தோர் - பரத்துவாசனோடு உடன் இருந்த முனிவரரையும் கூட்டி, முன்பே இராமன்பால் கழிபெருங்காதலுடையராய் அவன் வனம் புகுந்ததற்கு இரங்கிய உள்ளம் உடையவராதலின் பரதன் சொற்கள்அவர்களை மேலும் குளிர்வித்தன. மகிழ்ச்சியால் உடம்பு பூரித்தல் வழக்கு. ஆல் - ஏ, ஈற்றசைகள். 5 பரதன் சேனைக்கும் உடன் வந்தோர்க்கும் பரத்துவாசன் விருந்து அளித்தல் 2380. | ஆய காதலோடு ஐயனைக் கொண்டு, தன் தூய சாலை உறைவிடம் துன்னினான்; ‘மேய சேனைக்கு அமைப்பென் விருந்து’ எனா, தீயின் ஆகுதிச் செல்வனும் சிந்தித்தான். |
தீயின் - (ஓம வேள்வியின் ஆக்கிய) நெருப்பில்; ஆகுதிச் செல்வனும் -ஆகுதிகளை இட்டுச் செய்கின்ற வேள்விச் செல்வனாகிய பரத்துவாசனும்; ஆய காதலோடு -மேலிட்டெழுந்து உள்ளம் குளிர்ந்த அன்போடு; ஐயனைக் கொண்டு - பரதனை அழைத்துக்கொண்டு; தன் - தன்னுடைய; தூய சாலை உறைவிடம் - தூய்மையான தங்கும் இடமாகிய தவச் சாலையை; துன்னினான் - சென்றடைந்தான்; ‘மேய சேனைக்கு - பரதனுடன்வந்துள்ள சேனைகளுக்கு; |