‘பார் கொண்டவன் பரதன் - நிலத்தைக் கைக்கொண்டு ஆள்பவனாகிய பரதன்; இப்படை கொடு - இந்தச் சேனையைக் கொண்டு; மறம் கருதி - போர்த் தொழிலைக்கருதி; உள் கிடந்தது ஓர் கறுவு காதலால் - தன் மனத்தகத்தே தங்கிய வஞ்சனையோடுகூடிய பேராசையால்; விரதம் உற்று இருந்தவன்மேல் வந்தான் - தவ விரதம் மேற்கொண்டுள்ள இராமன்மேல் பிடையெடுத்து வந்துள்ளான்; இது சரதம்- இதுவே உண்மை; மற்று இலது’ - வேறு ஒன்றும் இல்லை; எனத் தழங்கு சீற்றத்தான்- என்று எண்ணிமிக்க கோபம் உடையவனாய்.....(மேல் முடியும்). பதினான்கு ஆண்டு முடிந்த பின்னர் மீண்டு வந்து தன் அரசைக் கவர்ந்து கொள்வானேஎன்கின்ற கருத்தால் படையெடுத்து வந்துள்ளான் என நினைக்கும் இலக்குவன் அதனையே ‘உள்கிடந்தது ஒரு கறுவு காதல்’ என்றான். 27 இலக்குவன் சீற்றத்துடன் இராமனை அடைந்து கூறத் தொடங்குதல் | 2402. | குதித்தனன் பாரிடை; குவடு நீறு எழ மதித்ததனன்; இராமனை விரைவின் எய்தினான்; ‘மதித்திலன் பரதன், நின்மேல் வந்தான், மதில் பதிப் பெருஞ் சேனையின் பரப்பினான்’ என்றான். |
(இலக்குவன் சீற்றத்தானாய்) குவடு நீறு எழ மிதித்தனன், பாரிடைக் குதித்தனன் -மலை உச்சி பொடுபடும்படி (மிகுந்த வேகத்தோடு) மிதித்துத் தரையிலே குதித்து; விரைவின் -வேகமாக; இராமனை எய்தினான் - இராமனை வந்தடைந்து; ‘பரதன் மதித்திலன் -பரதன் நின்னை ஒரு பொருளாகக் கருதாமல்; மதில் பதிப் பெருஞ் சேனையின் பரப்பினான்- மதில் சூழ்ந்த அயோத்தி நகரத்துப் பெருஞ் சேனைப் பரப்பினை உடையவனாய்; நின்மேல்வந்தான் - உன்மேல் போர்க்கு வந்தான்;’ எனா - என்று கூறி......(மேல்முடியும்). இராமனை மதியாது பரதன் போர்க்கு வந்தான் என்றான் -‘மதில் பதி’ என்றது அயோத்தியை. சேனை உடன் வந்ததே இலக்குவனது ஐயத்தை உறுதிப் படுத்துவதாகஅமைந்தது என்பது இதனால் வெளியாம். 28 இலக்குவன் போர்க் கோலம் பூண்டு, வீர உரை பகர்தல் | 2403. | கட்டினன் கரிகையும் கழலும்; பல் கணைப் புட்டிலும் பொறுத்தனன்; கவசம் பூட்டு அமைத்து இட்டனன்; எடுத்தனன் வரி வில்; ஏந்தலைத் தொட்டு, அடி வணங்கி நின்று, இனைய சொல்லினான். |
சுரிகையும் சுழலும் கட்டினன்- (இடையில்) உடைவாளையும், |