பக்கம் எண் :

திருவடி சூட்டு படலம் 653

(காலில்) வீரக்கழலையும் கட்டிக்கொண்டு;  பல்கணைப் புட்டிலும்
பொறுத்தனன்
- பல்வகைஅம்புகளையுடைய தூணியைத் (தோளில்)
சுமந்து;  கவசம் பூட்டு அமைத்து இட்டனன் -போர்க் கவசத்தை
(உடம்பிற்) பூட்டிக்கொண்டு; வரிவில் எடுத்தனன் - கட்டமைந்தவில்லைக்
(கையில்) எடுத்துக்கொண்டு; ஏந்தலை அடிதொட்டு வணங்கி நின்று -
இராமனைத்திருவடி தொட்டு வணக்கம் செய்து எழுந்து நின்று; இனைய
சொல்லினான்
- இவ்வார்த்தைகளைச் சொன்னான்.

     போர்க்குச் சன்னத்தனானான் என்றார். ஏந்தல் - இராமன்;
உயர்ந்தோன் என்னும்பொருளி்ல் வந்தது. திருவடி தொட்டு வணங்குதல்
என்பது  ஒரு மரபு.                                           29

இலக்குவன் வீர உரை  

2404. ‘இருமையும் இழந்த அப் பரதன் ஏந்து தோள்
பருமையும், அன்னவன் படைத்த சேனையின்
பெருமையும், நின் ஒரு பின்பு வந்த என்
ஒருமையும், கண்டு, இனி உவத்தி, உள்ளம் நீ.

     ‘இருமையும் இழந்த - இம்மை,  மறுமை இரண்டையும் சேர இழந்த;
அப் பரதன் ஏந்துதோள் பருமையும் - அந்தப் பரதனது  உயர்ந்த
தோளின் பருத்த தன்மையும்; அன்னவன்- அப் பரதன்;  படைத்த
சேனையின்
- பெற்றுள்ள சேனையின்;  பெருமையும் -பெருமையையும்;
நின்பின்பு வந்த - உனது  பின்னாலே வந்த; ஒரு என் - தனியான
என்னுடைய; ஒருமையும் - ஒப்பற்ற தன்மையையும்;  கண்டு - (இப்போது)
பார்த்து; இனி நீ உள்ளம் உவத்தி - இனிமேல் நீ மனமகிழ்ச்சி
அடைவாயாக......

     அண்ணன் மேல் போர்தொடுத்து வந்தான் எனவே அறத்துக்கு
மாறுபட்டான்; இருமையும் இழந்தான்என்றானாம். யான் ஒருவனே
அத்துணைச் சேனைகளையும் அழிப்பதைப் பார் என்றானாம்.          30

2405.‘படர் எலாம் படப் படும் பரும யானையின்
திடர் எலாம் உருட்டின, தேரும் ஈர்த்தன,
குடர் எலாம் திரைத்தன, குருதி ஆறுகள்,
கடர் எலாம் மடுப்பன, பலவும் காண்டியால்.

     ‘படல் எலாம் பட - பல வகைத் துன்பங்களும் அடைந்து; படும் -
இறக்கிற;  பரும யானையின் - அணி அணிந்த யானையினது;  திடர்
எலாம் உருட்டின
- உடல்களாகிய மேடுகளையெல்லாம் உருட்டி;  தேரும்
ஈர்த்தன
- தேர்களைஇழுத்துக்கொண்டு; குடர் எலாம் திரைத்தன -
குடல்களையெல்லாம் அலைத்துத் தள்ளி;  குருதி ஆறுகள் -