இரத்த நதிகள்; பலவும் கடர் எலாம் மடுப்பன - பலவும் கடல் முழுவதும் பாய்ந்து கலப்பனவற்றை; காண்டி - பார்ப்பாயாக... உருட்டி, ஈர்த்து, திரைத்துக் குருதி ஆறு கடலில் மடுத்தல் காண்டி என முடிக்க. குடல்,குடர் என்றார்போலக் கடல், கடர் என நின்றது செய்யுட்போலி. ‘ஆல்’ ஈற்றசை. 31 | 2406. | ‘கருவியும், கைகளும், கவச மார்பமும், உருவின; உயிரினோடு உதிரம் தோய்வு இல திரிவன - சுடர்க் கணை - திசைக் கை யானைகள் வெருவரச் செய்வன; காண்டி, வீர! நீ. |
‘வீர! நீ - இராமனே ! நீ; கருவியும் கைகளும் கவச மார்பமும் உருவின -எதிரிகளது ஆயுதங்களையும், கரங்களையும், கவசமணிந்த மார்பகத்தையும் உருவிக்கொண்டு; உயிரினோடு - அவர்கள் உயிரையும் உடன்பற்றி; உதிரம் தோய்வு இல -இரத்தத்தில் சிறிதும் தோயாமல்; சுடர்க்கணை - என்னுடைய ஒளிபடைத்த அம்புகள்; திசைக்கை யானைகள் - எட்டுத் திசைப் பக்கத்திலும் உள்ள யானைகளும்; வெருவர- அஞ்சும்படி; திரிவன செய்வன - சுற்றித் திரிதல் செய்வனவற்றை; காண்டி -பார்ப்பாயாக.... அம்புகள் உடலிற் பாய்ந்து உருவியும் உதிரம் தோயாமல் இருத்தலின் அவற்றைக் கண்டுதிசையானைகள் வெருவின. கை திசையொடு வருதலின் பக்கமாம். 32 | 2407. | ‘கோடகத் தேர், படு குதிரை தாவிய, ஆடகத் தட்டிடை, அலகை அற்று உகு கேடகத் தடக் கைகள் கவ்வி, கீதத்தின் நாடகம் நடிப்பன - காண்டி; நாத! நீ.’ |
‘நாத! நீ -; தாவிய குதிரை படு கேடகத் தேர் - தாவிச் செல்லும் குதிரைகள்இறந்து போன வளைந்து அழகிதாய தேரினது; ஆடகத் தட்டிடை - பொன்மயமானநடுப்பீடத்தின்கண்; அலகை- பேய்கள்; அற்று உகு கேடகத் தடக் கைகள் கவ்வி -போர்க்களத்துத் துண்டாகி விழுந்த கேடகத்தோடு கூடிய நீண்ட கைகளைத் தம் கையாற் பற்றி (தாளமிட்டுக்கொண்டு); கீதத்தின் - இசை பாடிக்கொண்டு; நாடகம் நடிப்பன -கூத்தாடுவனவற்றை; காண்டி - பார்ப்பாயாக.. பலகை எனப்படும் கேடயத்தோடு அற்று விழுந்த கைகளைப் பேய்கள் தாம் எடுத்துக்கொண்டனகானம் இட்டு ஆடுதல் போலும். கோடகம் என்பது தேர் உறுப்பு எனலும்ஆம். 33 |