| 2410. | ‘சூழி வெங் கட கரி, துரக ராசிகள், பாழி வன் புயத்து இகல் வயவர், பட்டு அற, வீழி வெங் குருதியால் அலைந்த வேலைகள் ஏழும் ஒன்றாகி நின்று இரைப்பக் காண்டியால். |
‘சூழி - முகபடாம் அணிந்த; வெங் கடகரி - கொடிய மதம் உடைய யானைகள்; துரக ராசிகள் - குதிரைத் தொகுதிகள்; பாழி - பருத்த; வன்- வலிய; புயத்து - தோளை உடைய; இகல் வயவர் - பகைத்த வீரர்கள்; பட்டு அற - செத்து விழ; வீழி - வீழ்ந்த; வெங்குருதியால் - கொடிய இரத்தப் பெருக்கால்; அலைந்த வேலைகள் ஏழும் - அலை வீசும் ஏழு கடல்களும்; ஒன்றாகி நின்று - ஒரு கடலாகியிருந்து; இரைப்ப- ஒலிசெய்ய; காண்டி -பார்ப்பாயாக...
நால்வகைச் சேனைகளும் அடியோடு அழிதலால் உண்டான குருதியாறு கூடுதலால் ஏழுகடல்களும்ஒன்றாகி இரரைத்தன. வீழி - வீழிப் பழம் போன்று சிவந்த குருதி என்றும் ஆம். அலைந்தஎன்பது வேலைகளுக்கு அடை. இனி, குருதியால் அலைவீசிய வேலைகள் ஏழும் ஒன்றாகின எனினும்அமையும். ‘ஆல்’ ஈற்றசை. 36 | 2411. | ‘ஆள் அற; அலங்க தேர் அழிய; ஆடவர் வாள் அற; வரி சிலை துணிய; மாக் கரி தாள் அற, தலை அற; புரவி தாளொடும் தோள் அற - வடிக் கணை தொடுப்ப - காண்டியால். |
‘ஆள் அற - போர் வீரர்கள் அறுபட; அலங்க தேர் அழிய - அசைகின்றதேர்கள் அழிய; ஆடவர் வாள் அற - வாள்வீரர்கள் வாளொடு அற்று விழ; வரிசிலைதுணிய - கட்டமைந்த வில்கள் துண்டுபட; மாக் கரி - பெரிய யானைகள்; தாள்அற தலை அற - தாளும் தலையும் துண்டபட்டு விழ; புரவி - குதிரைகள்; தாளொடும் தோள் அற - கால்களோடு தோள்கள் துண்டுபட; வடிக் கணை - கூரிய அம்புகளை; தொடுப்ப - யான் செலுத்த; காண்டி - பார்ப்பாயாக...
ஆள் என்றது தேர்மேல் நின்ற ஆளும் ஆம். ‘ஆல்’ ஈற்றசை. 37 | 2412. | ‘தழைத்த வான் சிறையன, தசையும் கவ்வின, அழைத்த வான் பறவைகள், அலங்கு பொன் வடிம்பு இழைத்த வான் பகழி புக்கு இருவர் மார்பிடைப் புழைத்த வான் பெரு வழி போக - காண்டியால். |
தழைத்த வாய் சிறையன - வளமான சிறந்த இறக்கைகளை உடையனவாய்; அழைத்த- தம் இனத்தைக் கூவி அழைத்த; வான் |