பக்கம் எண் :

திருவடி சூட்டு படலம் 661

2420.‘பொன்னொடும், பொரு கழல் பரதன் போந்தனன்,
நல் நெரும் பெரும் படை நல்கல் அன்றியே,
என்னொடும் பொரும் என இயம்பற்பாலதோ?-
மின்னொடும் பொருவுற விளங்கு வேலினாய்!

     ‘மின்னொடும் பொரு உற - மின்னலோடும் ஒப்புக் கொள்ளுமாறு;
விளங்குவேலினாய் - விளங்குகின்ற வேலினை உடைய இலக்குவனே!;
பொன்னோடும் பொருகழல் -பொன்னானியன்று பொன்னோடு
மோதுகின்ற கழலை அணிந்த;  பரதன் -;  போந்தனன் -வந்துள்ளான்;
(எதற்கு) நல் நெடும் பெரும் படை நல்கல் அன்றியே - (என்னை
அரசனாக்கி எனக்கு) நல்ல நெடிய பெரிய சேனையைத் தருதற்காக
அல்லாமல்; என்னொடும்பொரும் - என்னோடு சண்டையிடுவான்; என
இயம்பற் பாலதோ?
- என்றுசொல்லலாமா?... (கூடாது என்றபடி)

     கழல்,  பொன்னாற் செய்யப்படுதலின் ‘பொன்னொடும் பொருகழல்’
ஆயிற்று.‘பொன்னொடும்’ என்பதைத் தனியே கொண்டு பொன்னொடும்
பிடை நல்கல் எனக் கூட்டிப்பொருள் உரைப்பதும் உண்டு. பொன் தருதல்-
அரசச் செல்வத்தைத் தருதல் என்று பொருள் படுதல்வழக்காற்றின்
இன்மையும் இடையீடு இன்றிப் பொருகழல் என்பதனோடு அது மாறி
முடிதலும் அமைதலின் அவ்வாறுரைக்க இயலாமையறிக. அரசர்கள்வசம்
சேனையைத் தருதல் முறை ஆதலின் இராமனைஅரசன் எனக் கருதும்
பரதன், அவன்பால் சேனைகளைத் தர வருகின்றானாதல் வேண்டும்
என்றான்இராமன்.                                             46

2421.‘சேண் உயர் தருமத்தின் தேவை செம்மையின்
ஆணியை, அன்னது நினைக்கல் ஆகுமோ?
பூண் இயல் மொய்ம்பினாய்! போந்தது ஈண்டு, எனைக்
காணிய; நீ இது பின்னும் காண்டியால்.’

     ‘பூண் இயல் மொய்ம்பினாய்! - அணி அணிந்த தோள்களை
உடையவனே!;  சேண்உயர் தருமத்தின் தேவை - மிக உயர்ந்த
தருமத்தின் தெய்வ வடிவமான; செம்மையின்ஆணியை -
நல்லொழுக்கமாகிய செம்மையின் உரைகல்லாக விளங்குகின்ற உத்தம
பரதனை;  அன்னது - (நீ நினைத்தாற் போல) அப்படித் தவறுபட;
நினைக்கல் ஆகுமோ? -கருதலாமா?;  ஈண்டுப் போந்தது - (பரதன்)
இங்கே வந்தது; எனைக் காணிய -என்னைக் காண்பதற்காக;  இது -
இக்கருத்தினை; நீ - இலக்குவ நீ!; பின்னும் - (அவன் நெருங்கிய) பிறகும்;
காண்டி - (அவன்பால் நேரில்) பார்த்து அறிவாயாக.

     அறக் கடவுள், செம்மையின் ஆணி பரதன். செம்மை - மனக்
கோட்டம்  இன்மையாம்.நடுவுநிலைமை  என்பதாம். எனவே, அரசின்பால்
பற்று வைத்து ஒருபாற் கோடும் தன்மை அவனுக்கில்லை என்பதாம். ஆணி
என்பதற்கு ‘அச்சாணி’