பக்கம் எண் :

664அயோத்தியா காண்டம்

காரணமாகத் தன் மனத்துண்டாகிய கோபத்தோடும்; உணர்வு - தன்
உணர்ச்சிகளும்;சோர்தர - தளர்ந்தொழிய; வில்லொடும் - (தன்
கையிற்பிடித்த)வில்லோடும்; கண்ண நீர் - (சிறந்த பரதனைத் தவறாகக்
கருதினோமே என்றகழிவிரக்கத்தால் ஏற்படும்) கண்ணீரும்; நிலத்து வீழ-
பூமியில் விழவும்; எல்ஒடுங்கிய முகத்து - ஒளி குன்றிப் பொலிவழிந்த
முகத்துடனே; நின்றனன் -நின்றான்.

     மல் ஒடுங்கிய - உலகத்து மல்தொழில் வலிமை எல்லாம் தன்பால்
வந்து தங்கி்விட்டது எனினும் அமையும். இனி விரதவொழுக்கத்தால் வலிமை
குன்றிய தோள் எனல் ஈண்டுப் பொருந்தாமையும், அரசர்க்கு அங்ஙனம்
கூறுவது மரபாகாமையும் உணர்க. பரதன் திறத்துத் தான் நினைந்தன
அனைத்தும் பிழைபட்டமையானும், உத்தமனை அதமனாகக் கருதிய
அதனால் எற்பட்ட மனச்சோர்வும் இலக்குவனை ‘எல் ஒடுங்கிய முகம்’
உடையவனாக ஆக்கியது.                                        51

பரதன் இராமனின் திருவடி வணங்குதல்  

2426.கோது அறத் தவம் செய்து குறிப்பின் எய்திய
நாதனைப் பிரிந்தனள், நலத்தின் நீங்கினாள்,
வேதனைத் திருமகள் மெலிகின்றாள், விடு
தூது எனப் பரதனும் தொழுது தோன்றினான்.

     கோது அறத் தவம் செய்து - குற்றமில்லாமல் நல்ல தவத்தைச்
செய்து; குறிப்பின் எய்திய - தன் மனக்கருத்தின் வண்ணம் பெற்ற;
நாதனை - தன்நாயகனை; பிரிந்தனள்- பிரிந்து; நலத்தின் நீங்கினான்-
எல்லாநன்மைகளிலிருந்தும் நீங்கிய; வேதனை மெலிகின்றாள் -
துன்பத்தால் மெலிகின்ற; திருமகள் - இராச்சிய லட்சுமி; விடு தூது என -
(இராமநாயகன் பால்) அனுப்பிய தூது போல; பரதனும்-; தொழுது -
வணங்கி; தோன்றினான்-.

     பன்னெடுங்காலம் செய்த நற்றவத்தால் இராமனை அரசனாகப் பெறும்
பாக்கியம் கோசல அரசுக்குக் கிடைத்தது. அது உடனே
இழக்கப்பெற்றபடியால் இவ்வாறு கூறினார். மீண்டும் கோசல அரசை இராமன்
ஏற்க வேண்டுதற்கு வந்தவன் பரதன் ஆதலின் ‘விடு தூது’ எனப் பெற்றான்.
தற்குறிப்பேற்றவணி.                                            52

2427.‘அறம்தனை நினைந்திலை; அருளை நீத்தனை;
துறந்தனை முறைமையை’ என்னும் சொல்லினான்,
மறந்தனன், மலர்அடி வந்து வீந்தனன் -
இறந்தனன் தாதையை எதிர்கண்டென்னவே.

     வந்து - (பரதன் இராமன் அருகில்) வந்து; இறந்தனன் தாதையை -
இறந்து போன தந்தையாய தயரதனை; எதிர் - தன் எதிரே; கண்டு
என்னவே
- மீண்டும்கண்டாற்போல; (இராமனைக் கண்டு) ‘அறம் தனை
நினைந்திலை
- அரச ஏற்றல் அறம்தான்என்பதை நினையவில்லை;