பக்கம் எண் :

திருவடி சூட்டு படலம் 665

அருளை நீத்தனை - இரக்கம் அற்றவனாக ஆயினாய்; முறைமையைத்
துறந்தனை”
- மூத்தவன் அரசாளுதல் என்கின்ற முறைமையயும்
கைவிட்டாய்;’ என்னும் சொல்லினான் -என்கின்ற சொற்களைக்
கூறியவனாய்; மறந்தனன் - தன் உணர்வு கெட்டு; மலர் அடி-
(இராமனது) மலர் போன்ற பாதங்களில்; வீழ்ந்தனன் - விழுந்தான்.

     அறம் - அரசாளுதல் அரச தர்மம் என்பது. பரதன்பால்
காட்டவேண்டிய இரக்கம் - தான் அரசாளாது பரதன் அரசேற்க
விரும்பமாட்டான் என்று உணராது அவன்பால் அரசைத் தள்ளிவிட்டு
வந்தது இரக்கமின்மையாம். மூத்தவளாகிய தான் அரசாளவேண்டியது
முறைமை யாதலின், முறைமையைத் துறந்தனை என்றான். இவ்வளவும்
பரதனது ஆற்றாமையைப் புலப்படுத்துவனவாகக் கொள்க. ‘ஏ’ ஈற்றசை.   53

இராமன் மனம் கலங்கிப் பரதனைத் தழுவுதல்  

2428.‘உண்டுகொல் உயிர்?’ என ஒடுங்கினான் உருக்
கண்டனன்; நின்றனன் - கண்ணன் கண்எனும்
புண்டரீகம் பொழி புனல், அவன் சடா
மண்டலம் நிறைந்து போய் வழிந்து சோரவே.

     கண்ணன் - அருட்கண்ணுடையவனாகிய இராமன்; ‘உண்டு கொல்
உயிர்’ என ஒடுங்கினான்
- உயிர் உண்டோ இல்லையோ என்று காண்பார்
ஐயுறுமாறு மெலிந்து நின்றபரதனது; உரு - வடிவத்தை; கண்டனன்-
பார்த்து; கண் எனும் புண்டரீகம்- (தன்) கண் என்கின்ற தாமரைகள்;
பொழி புனல்- இரக்கத்தாற் சொரிகின்றகண்ணீர்; அவன் சடாமண்டலம்
நிறைந்து போய்
- அப்பரதனது சடைமுடியிற் போய்நிரம்பி மேற்சென்று;
வழிந்து சோர - பெருகி வழிந்தொழுக; நின்றனன் -நின்றான்.

     பரதன் உருவ மெலிவு இராமனது உள்ளத்தை உருக்கியது; கண்ணீர்
பெருகியது; அதனால் காலில் விழுந்த பரதனது சடைமுடியைக் கண்ணீர்
நிறைத்தது. ‘கொல்’ - ஐயம். மண்டலம் - வட்டம், சடாமண்டலம் -
வட்டமாகச் சடையைச் சுழித்துக் கட்டுதலாம்.                        54

2429.அயாவுயிர்த்து, அழு கணீர் அருவி மார்பிடை,
உயாவுற, திருஉளம் உருக, புல்லினான் -
நியாயம் அத்தனைக்கும் ஒர் நிலயம் ஆயினான் -
தயா முதல் அறத்தினைத் தழீஇயது என்னவே.

     நியாயம் அத்தனைக்கும் ஒர் நிலயம் ஆயினான் - எல்லா
நேர்மைகளுக்கும் ஒப்பற்றஇருப்பிடமாக உள்ள இராமன்; தயாமுதல்
-
அருள் தெய்வம்; அறத்தினைத் தழீஇயது என்ன - தருமதேவதையைத்