பக்கம் எண் :

674அயோத்தியா காண்டம்

வசிட்டன் இராமனை நோக்கிக் கூறுதல்

2443.மற்றும் வரற்பாலர் எல்லாரும் வந்து அடைந்து,
சுற்றும் இருந்த அமைதியினில், துன்பு உழக்கும்
கொற்றக் குரிசில் முகம் நோக்கி, கோ மலரோன்
பெற்ற பெருமைத் தவ முனிவன் பேசுவான்.

     மற்றும் - மேலும்; வரற்பாலர் எல்லாரும் - வரவேண்டியவர்கள்
எல்லாரும்;  வந்து  அடைந்து - வந்து சேர்ந்து;  சுற்றும் இருந்த
அமைதியினில்
- இராமனைச் சுற்றி இருந்த பொழுதில்; துன்பு உழக்கும்
கொற்றக் குரிசில் முகம் நோக்கி
- துன்பத்தில் அழுந்திய வெற்றி
நம்பியாகிய இராமனது முகத்தைப் பார்த்து; கோமலரோன் -
பெருமையுடைய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம தேவன்; பெற்ற -
புதல்வன் ஆன; பெருமைத் தவ முனிவன் - பெருமையுடைய தவ
முனிவனாகிய வசிட்டம்; பேசுவான் -.

     பிரமனது நகத்திற் பிறந்தவன் வசிட்டன் என்னும் பாகவதம்.
‘வதிட்டன் தேற்றினான்’ என முன்னர்க் (2441.) கூறியது தொகை. இது விரி.
இனி விரிவாக வதிட்டன் தேற்றுதலைக் கூறுவார்.                    69

கலிவிருத்தம்

2444.துறத்தலும் நல் அறத்
     துறையும் அல்லது
புறத்து ஒரு துணை இலை,
     பொருந்தும் மன்னுயிர்க்கு;
“இறத்தலும் பிறத்தலும்
     இயற்கை” என்பதை
மறத்தியோ, மறைகளின்
     வரம்பு கண்ட நீ?

     ‘மறைகளின் வரம்பு கண்ட நீ - வேதங்களின் எல்லையை
அளவிட்டறிந்த நீ; பொருந்தும் மன்னுயிர்க்கு - (உலகத்திற்) பொருந்திய
நிலைபெற்ற உயிர்களுக்கு; “இறத்தலும் பிறத்தலும் இயற்கை” - மரணம்,
சனனம் இரண்டும் இயல்பே; துறத்தலும்- துறவற நெறியில் சேர்தலும்;
நல் அறத் துறையும் - அறத்தாற்றின் இல்வாழ்க்கைநடத்தலும்; அல்லது-
அல்லாமல்; புறத்து - வெளியே; ஒரு துணை இல்லை- வேறு ஒரு
துணையும் இல்லை; என்பதை - என்கின்ற செய்தியை; மறத்தியோ -
மறந்துவிட்டாயோ.

     பிறத்தல் இறத்தல் இயற்கை ஆதலின், தயரதன் இறந்ததுபற்றி
வருந்தல் வேண்டா. உயிர்க்குத் துணை அறவழியில் இல்லறம் ஆற்றல்,
அல்லது துறவறம்