பக்கம் எண் :

திருவடி சூட்டு படலம் 675

ஆதலின் அறவழியில் அரசாட்சி நடத்தி விண்ணுலகு சென்று இன்பம்
துய்க்கும் ‘தயரதன்பற்றிவருந்தல் வேதங்களை நன்குணர்ந்த உனக்குக்
கூடாது என்று வசிட்டன் இராமனுக்கு எடுத்துக்கூறினான். வீடுபேற்றுக்குச்
சிறந்த வழியாதலின் துறவு முற்கூறப்பட்டது. ‘ஓ’ காரம்வினாப்பொருட்டு. 70

2445.‘ “உண்மை இல் பிறவிகள்,
     உலப்பு இல் கோடிகள்,
தண்மையில் வெம்மையில்
     தழுவின” எனும்
வண்மையை நோக்கிய,
     அரிய கூற்றின்பால்,
கண்மையும் உளது எனக்
     கருதல் ஆகுமோ?

     ‘(உயிர்களுக்கு), “உண்மை இல் பிறவிகள் - நிலையில்லாதனவாகிய
பிறப்புகள்; உலப்பு இல் கோடிகள் - அளவில்லாத கோடிக் கணக்கானவை;
(அவை) தண்மையில்வெம்மையில் தழுவின” - இன்பத்தாலும்
துன்பத்தாலும் உண்டாகப்பெற்றவை; எனும் -என்ற; வண்மையை -
வளமாக நூல்களில் கூறப்பெற்றவற்றை; நோக்கிய - நன்குபார்த்து
அறிந்தபின்பு; அரிய கூற்றின்பால் - கொடிய யமனிடத்தில்; கண்மையும்
உளது என
- கண்ணோட்டமும் இருக்கின்றது என்று; கருதல் ஆகுமோ -
நினைக்கக்கூடுமோ? (கூடாது)

     இன்ப துன்பங்கட்கேற்பப் பல பிறவிகள் எடுக்கும் உயிர்கல் அவை
தீர்ந்த பிறகு இறக்கின்றன. இதில் யமன் கண்ணோட்டம் உடையவனாதல்
வேண்டும் எனக் கருதல் எற்றுக்கு என்பதாம். கண்மையாவது கண்ணின்
தன்மை; அது கண்ணோட்டம். பிறர் துன்பம் கண்டு அவர்மாட்டுக் கண்
ஓடியவழிச் செய்யப்படுவது ஆதலின், கண்மை எனப்பெற்றது.           71

2446. ‘பெருவதன் முன் உயிர் பிரிதல் காண்டியால்?
மறு அறு கற்பினில் வையம் யாவையும்
அறுபதினாயிரம் ஆண்டும் ஆண்டவன்
இறுவது கண்டு அவற்கு, இரங்கல் வேண்டுமோ?

     ‘பெறுவதன் முன் - தாய் ஈனுவதற்கு முன்பாகவே; உயிர்பிரிதல் -
சிலஉயிர்கள் உடல் விட்டு நீங்கி இறப்பதை; காண்டி - பார்க்கின்றாய்;
(அங்ஙனமாக)வையம் யாவையும் மறு அறு கற்பினில் - இந்த உலகம்
எல்லாவற்றையும் குற்றமற்றகற்பினால்; அறுபதினாயிரம் ஆண்டும்
ஆண்டவன்
- அறுபதினாயிரம் ஆண்டுகள் அரசாண்டசக்கரவர்த்தி;
இறுவது கண்டு - இறத்தலைப் பார்த்து; அவற்கு -அவன்பொருட்டு;
இரங்கல் வேண்டுமோ - மனம் வருந்த வேண்டுமோ? (வேண்டாம்
என்றபடி)