உயிர் எடுக்கும் பல்வேறு வகையான பிறவிகள் கணக்கில் அடங்காதன. “உரை சேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதம்” (திருஞா. தேவா: 1-132.4) என்றார் வினைவழியில் உயிர் இவ்வாறெல்லாம் ஆதலின் அதுபற்றி இரங்கவேண்டா என்றார். 76 | 2451. | ‘உண்டுகொல் இது அலது உதவி நீ செய்வது? என் தகு குணத்தினாய்! தாதை என்றலால், புண்டரீகத் தனி முதற்கம் போக்கு அரு விண்டுவின் உலகிடை விளங்கினான்அரோ! |
‘எண் தகு குணத்தினாய்! - எல்லாராலும் நன்கு மதிக்கப்படுகின்ற குணங்களைஉடையவனே!; தாதை என்றலால் - (தயரதன் உனக்குத்) தந்தை என்ற காரணத்தால்; புண்டரீகத் தனி முதற்கும் - தாமரை மலரில் வீற்றிருக்கும் ஒப்பற்ற படைத்தற் கடவுளானபிரமனுக்கும்; போக்கு அரு - செல்லுதற்கு அரிய; விண்டுவின் உலகிடை -திருமால் உலகத்தில்; விளங்கினான் - சென்று சேர்ந்து ஒளி பெற்றான்; நீசெய்வது உதவி - மகளாகிய நீ தந்தைக்குச் செய்வதாகிய உதவி; இது அலது உண்டுகொல்- இதுவல்லது இதன்மேல் வேறு உண்டோ? (இல்லை என்றபடி). நினைக்கப்படுகிற குணங்கள் என்றுமாம். எட்டுக் குணங்கள் என்பாரும் உளர். தந்தையை நற்கதியில் சேர்த்தல் மகன் கடமையாதலின், விண்டு லோகத்தில் தயரதனை விளங்கவைத்தலின் மகனாற் பெறவேண்டியதைத் தயரதன் பெற்றுச் சிறந்தான் என்றார். விளங்குதல் - ஒளியுடல் பெறுதல். பிரமனுக்கும் செல்லமுடியாத விண்டு உலகத்தில் விளங்கினான் என்று கூறினார் ஏனும், பின்னர் மீட்சிப்படலத்து, “புண்டரீகத்துப் புராதனன் தன்னொடும் பொருந்தி, அண்டமூலத்து ஓர் ஆசனத்து இருத்தினை, அழக!” என்று (10070) தயரதன் கூறுமாறு கொண்டு ஏற்பப் பொருள் செய்க. 77 தந்தைக்கு நீர்க்கடன் செய்யுமாறு வசிட்டன் கூறுதல் | 2452. | ‘ஐய! நீ யாது ஒன்றும் அவலிப்பாய் அலை; உய் திறம் அவற்கு இனி இதனின் ஊங்கு உண்டோ? செய்வன வரன் முறை திருத்தி, சேந்த நின் கையினால் ஒழுக்குதி கடன் எலாம்’ என்றான். |
‘ஐய! - இராமனே; நீ யாது ஒன்றும் அவலிப்பாய் அலை - நீ சிறிதளவும்துன்பப்பட வேண்டா; அவற்கு - அத்தயரதனுக்கு; உய்திறம் - உய்தி பெரும்தன்மை; இதனின் ஊங்கு - இந்த விஷ்ணு லோகத்தை அடைவதைக் காட்டிலும்; இனிஉண்டோ?- இனிமேல் வேறு இருக்கிறதோ? (இல்லை) ஆதலின்; செய்வன -(தந்தைக்குச்) செய்யவேண்டுவனவாகிய அந்திமக் கிரியைகளை; வரன்முறை - நூல்களிற்சொல்லிய முறையானே; திருத்தி - ஒழுங்குறச் செய்து; |