அன்று தீர்ந்தபின் - அன்றையநாள் கழிந்தபிறகு (மறுநாள்); அரச வேலையும்- அரசர் கூட்டமும்; துன்று செஞ்சடைத் தவரும்- நெருங்கிய சிவந்த சடையினை உடையமுனிவர்களும்; சுற்றமும் - சுற்றத்தினரும்; தன் துணைத் திருத் தம்பிமார்களும்- தன்னுடைய இணைபிரியாத சீரிய இளவல்களும்; சென்று சூழ - சென்று சற்றிலும் இருக்க; ஆண்டு இருந்த - அங்கே வீற்றிருந்த; செம்மல்- தலைமையோனாய இராமன்...(மேல் முடியும்) அரச வேலை - அரசர் வேலை. ஈறுகெட்டது. வேலை - கடல் என்பது ஈண்டுக் கூட்டத்தை உணர்த்தியது. உருவகம். மூவரையும் ஒருசேரத் தம்பிமார்கள் என்றார். செம்மல்தான் ‘பரிந்து கூறினான்’ (2470) என முடியும். 95 | 2470. | ‘வரதன் துஞ்சினான்; வையம் ஆணையால், சரதன் நின்னதே; மகுடம் தாங்கலாய், விரத வேடம், நீ என்கொல் வேண்டுவான்? பரத! கூறு’ எனாப் பரிந்து கூறினான். |
‘பரத!-; வரதன் துஞ்சினான் - மேலானவனாய தயரதன் இறந்தான்; வையம்- நிலவுலகம்;ஆணையால் - (அவனது ) கட்டளையால்;சரதம் - உண்மையாக;நின்னதே - நின்னுடையதே; (அவ்வாறிருக்க) நீ மகுடம் தாங்கலாய் - நீ மணிமுடிசூடாமல்; விரத வேடம் - தவ வேடத்தை; வேண்டுவான் - விரும்பி அணிந்தது; என்கொல்? - எதனால்’; கூறு’ - சொல்வாய்; எனா - என்று; பரிந்து - அன்பு கொண்டு; கூறினான் - கேட்டு மொழிந்தான். வரதன் - வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுப்பவன் எனலும் ஆம். “ஈந்தே கடந்தான் இரப்போர்க் கடல்” (172.) என்றார் முன்னும். வேண்டுவான் எதிர்கால வினையெச்சம்; இங்குத் தொழிற்பெயர்த் தன்மையாய் வந்தது. ‘வேண்டுதல் என் சொல்’ என உரைக்க. 96 பரதன் தன் கருத்தை விளக்கி உரைத்தல் | 2471. | என்றலும், பதைத்து எழுந்து, கைதொழா நின்று, தோன்றலை நெடிது நோக்கி, ‘ நீ அன்றி யாவரே அறத்து உளோர்? அதில் பின்றுவாய் கொலாம்?’ என்னப் பேசுவான்; |
என்றலும் - என்று இராமன் கேட்டவளவில் (பரதன்); பதைத்து - துடித்து; எழுந்து -; கை தொழா நின்று - கைகூப்பி வணங்கி; தோன்றலை நெடிது நோக்கி - இராமனை நெடுநேரம் பார்த்து; நீ அன்றி - நீ யல்லாமல்; அறத்து உளோர்- தருமவழியில் பிறழாமல் நிற்பார்; யாவர் - யார் இருக்கிறார்கள்; அதில் - அவ்வறவழியில்; |