பின்றுவாய் கொல்’ - நீயும் பின்னிடுவாயோ; என்ன- என்று; பேசுவான்- மேலும் கூறுவான் ஆயினன். இராமனும் இப்படிக் கேட்டுவிட்டானே என்பது பதைப்புக்கும், நெடிது நோக்கியமைக்கும் காரணம், அறவழியில் மேற்சொல்ல முடியாமல் பின்தங்கி விடுதலைப் ‘பின்றுவாய்’ என்றான். ‘கொல்’ ஐயவினா.‘ஆம்’ ‘ஏ’ அசைகள். 97 | 2472. | ‘மனக்கு ஒன்றாதன வரத்தின் நின்னையும், நினக்கு ஒன்றா நிலை நிறுவி, நேமியான் - தனைக் கொன்றாள் தரும் தனையன் ஆதலால், எனக்கு ஒன்றா, தவம் அடுப்பது எண்ணினால்? |
‘மனக்கு ஒன்றாதன - (சான்றோர்) மனத்துக்குப் பொருத்தம் இல்லாதனவாகிய; வரத்தின் - வரத்தினால்; நின்னையும் நினக்கு ஒன்றாநிலை நிறுவி - உன்னையும்உனக்குப் பொருந்தாத நிலைமையில் நிறுத்தி; நேமியான்தனை - சக்கரவத்தியாகியதயரதனை; கொன்றாள் - கொன்ற கைகேயி; தரும் - பெற்ற; தனையன் -மகன்; ஆதலால் -; எனக்கு-; எண்ணினான் - நினைத்தால்; தவம் - விரதவொழுக்கத்தை; அடுப்பது - மேற்கொள்ளுவது; ஒன்றா - பொருந்தாது. ‘ஒன்றா’ என்பது ‘ஒன்றாது’ என்பதன் விகாரம். நான் தவம் மேற் கொள்வது பொருந்தாது என்று கருதியோ இவ்வாறு என்னை வினாவினாய் என்பது குறிப்பு. முறைமை தவறியதைக் கேட்ட வரம் ஆதலின் ‘மனக்கு ஒன்றாதன வரம்’ என்றான். 98 | 2473. | ‘நோவது ஆக இவ் உலகை நோய் செய்த பாவகாரியின் பிறந்த பாவியேன், சாவது ஒர்கிலேன்; தவம் செய்வேன் அலேன்; யாவன் ஆகி, இப் பழிநின்று ஏறுவேன்? |
நோவது ஆக - வருந்துவதாக; இவ் உலகை - இந்த உலகத்தை; நோய்செய்த - துன்புறுத்திய; பாவகாரியின் - பாவத்தைச் செய்தவனிடத்தில்; பிறந்த -; பாவியேன் - பாவியாகிய யான்; சாவது ஒர்கிலேன் - சாகத்துணிந்தேனில்லை; தவம் செய்வேன் அலேன் - தவம் செய்வதற்குத் தக்கவனும் அல்லேன்; யாவன் ஆகி இப்பழி நின்று ஏறுவேன்? - (அப்படியானால்) எத்தன்மையானாகி இந்தப்பழியிலிருந்து நீங்குவேன்? பழிநீங்குவது இறப்பினாலோ பிராயச்சித்தமாகத் தவம் செய்வதனாலோ ஆகவேண்டும்.இரண்டும் இல்லையானால் என் பழியை எவ்வாறுதான் போக்கிக் சொள்வேன் எனப் பரதன் மனம்கலங்கினான். பாவகாரி - பாவி. 99 |