பக்கம் எண் :

690அயோத்தியா காண்டம்

 வகை இல் வஞ்சனாய் அரசு வவ்வ, யான்
பகைவனேகொலாம்? இறவு பார்க்கிறேன்!

     ‘தொகை இல் அன்பினால் - (உன்னிடத்தில்) எண்ணமுடியாத
அன்பினால் இறைவன்துஞ்ச - தயரதன் இறக்க; நீ புகைஇல் வெஞ்சுரம்
புகுத
- நீ புகையில்லாமல் எரியும்கொடுங்சுரத்தில் சேர்ந்திட; புந்தியால்-
புத்தியினால்; வகை இல் வஞ்சனாய்- வகுத்தற்கு முடியாத வஞ்சனை
உடையனாய்; அரசு வவ்வ - உன் அரசைக்கவாந்துகொள்வதற்கு; யான்
இறவு பார்க்கின்றேன்
- நான் சோர்கின்ற சமயம்பார்த்துக்
காத்திருக்கிறவன் ஆகிறேன்; பகைவனே கொல் - பகைவனேயோ?

     தந்தையும் உரிமை மைந்தனும் இல்லாதபொழுது அரசைக் கைப்பற்றி
தல் பகைவர் செயலேயாம். சோர்ந்த சமயம் பார்த்து இருந்து அரசு
கைப்பற்றுவார் அவரே என்றான். இறவு பார்த்தல் - சோர்ச்சியறிதல்.    102

2477.‘உந்தை தீமையும், உலகு உறாத நோய்
தந்த தீவினைத் தாய் செய் தீமையும்,
எந்தை ! நீங்க, மீண்டு அரசு செய்க’ எனா,
சிந்தை யாவதும் தெரியக் கூறினான்.

     ‘எந்தை - எம் தலைவனே!; உந்தை - உனக்குத் தந்தையாகிய
தசரதன்; தீமையும் - (செய்த) தீமையும்; உலகு - உலகத்துக்கு; உறாத
நோய்
-இதுவரை வராத துன்பத்தை; தந்த - கொடுத்த; தீவினைத் தாய்-
பாவ வடிவமான என்தாய் கைகேயி;  செய் தீமையும் - செய்த தீமையும்;
நீங்க - எல்லாம்போக; மீண்டு - நாட்டுக்குத் திரும்பிவந்து; அரசு
செய்க’
- அரசாட்சிசெய்வாயாக;  எனா - என்று; சிந்தை யாவதும்
தெரிய
- தன்மனக்கருத்து முழுதும் விளங்கும்படி; கூறினான்- சொன்னான்.

     இராமன் பிரிவினால் உலகைத் துன்புறச் செய்தது தயரதன் செய்த
தீமை. தயரதனை ‘உந்தை’ என்றான். இங்கு இராமனை மீள அழைப்பதற்கு
ஒரு காரணம் காட்ட விரும்புகின்றவன் ஆதலின், ‘உலக்குத் தந்தை செய்த
தீமை’ என்று அவனோடு நெருங்கிச் சொன்னான் என்க. இனி
“மன்னேயாவான் வரும் அப்பரதன் தனையும் மகன் என்று உன்னேன்”
எனத் துறந்தான். ஆதலால், அதுபற்றி உந்தை என்றான் எனலும் ஆம்.
இராமன் மீண்டு வந்து அரசேற்றலால் விளையும் நலம் இது எனக்
கூறினான்.                                                   103

பரதன் வேண்டுகோளை இராமன் மறுத்துரைத்தல்  

2478.சொற்ற வாசகத் துணிவு உணர்ந்த பின்,
‘இற்றதோ இவன் மனம்?’ என்று எண்ணுவான்,