| | ‘வெற்றி வீர! யான் விளம்பக் கேள்’ எனா, முற்ற நோக்கினான் மொழிதல் மேயினான்.; |
சொற்ற - (இவ்வாறு பரதன்) சொன்ன; வாசகம் - சொற்களின்; துணிவு - உறுதியை; உணர்ந்த பின் - அறிந்த பிறகு (இராமன்); ‘இவன் மனம்- இப்பரதனது மனம்; ‘இற்றதோ’ - இன்னத்தன்மை உடையதோ; என்று எண்ணுவான் - என்று கருதுபவனாகி (அவனை நோக்கி); ‘வெற்றி வீர! - வெற்றியுடைய வீரனே; யான்விளம்பக் கேள்’ எனா - யான் சில வார்த்தைகள் சொல்லக் கேட்பாயாக என்று சொல்லி; முற்ற நோக்கினான் மொழிதல் மேயினான் - முழுவதும் நன்கு பார்த்துச் சொல்லத் தொடங்கினான். ‘முற்ற நோக்கினான்’ என்பதனை இராமனுக்கு ஒரு பெயர் ஆக்கினும் அமையும். “மண்ணை என் வயின் தரும்” (2419) என்று இராமன் முன்னர்க் கூறினானாயினும், பரதன் தான் அரசாளுதல் அறத்திற்கு விரோதம் என்று கருதும் எண்ணம் உடையவனாயிருக்கின்றான் என்பது பரதன் கூற்றால் இப்போது இராமனுக்கு விளங்கியது ஆதலின், பரதன் அரசாளுவது அறமே என்றறிய உணர்த்திச் சில வார்த்தைகள் இராமன் கூறத் தொடங்கினான். அது இதன் பின்வரும் ஏழு செய்யுள்களில் கூறப்பெரும். 106 | 2479. | ‘முறையும், வாய்மையும், முயலும் நீதியும், அறையும் மேன்மையோடு அறனும் ஆதி ஆம் துறையுள் யாவையும், கருதி நூல் விடா இறைவர் ஏவலால் இயைவ காண்டியால். |
முறையும் - நல்லொழுக்கமும்; வாய்மையும் - சத்தியமும்; முயலும் நீதியும் - எல்லோரும் அடைய முயலும் நியாயமும்; அறையும் - சிறப்பித்துச்சொல்லப்பெறும்; மேன்மையோடு - மேன்மையும்; அறனும் - தருமமும்; ஆதிஆம் - இவை முதலாகிய; துறையுள் யாவையும் - அறத்துறையுள் சேர்ந்த எல்லாம்; கருதி நூல் விடா இறைவர்- வேத வழியிற் சிறிதும் பிறழாத அரசர்களது; ஏவலால்-கட்டளையாலே; இயைவ- உண்டாவன என்பதை; காண்டி - அறிவாயாக. இறைவர் கருதிவழி பிறழாதவர் ஆயின் அவர் ஏவுவனவே அறத் துறையாம் ஆதலின் தயரதன் ஏவல்வழி பரதன் அரசாளுவது அறமே என்று பரதனுக்கு இராமன் உணர்த்தினான் 105 | 2480. | ‘பரவு கேள்வியும், பழுது இல் ஞானமும், விரவு சீலமும், வினையின் மேன்மையும் - உர விலோய்! - தொழற்கு உரிய தேவரும், “குரவரே”எனப் பெரிது கோடியால். |
|